வீடு / சமையல் குறிப்பு / கோவை காந்திபுரம் ரோட் சைடு மசாலா பட்டீஸ் பாவ்

Photo of Kovai gandhipuram road side masala patties pav by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
415
1
0.0(0)
0

கோவை காந்திபுரம் ரோட் சைடு மசாலா பட்டீஸ் பாவ்

Oct-08-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
75 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோவை காந்திபுரம் ரோட் சைடு மசாலா பட்டீஸ் பாவ் செய்முறை பற்றி

பாவ் பண்ணில் தயாரிக்கப்படும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாவ்பன் ஒரு பாக்கெட்
  2. வேக வைத்த உருளைக்கிழங்கு 4
  3. பொடியாக நறுக்கிய பூண்டு 2 ஸ்பூன்
  4. எண்ணெய் 2 டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  6. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2
  7. எலுமிச்சை பழம் பாதி
  8. கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
  9. உப்பு தேவையான அளவு
  10. காய்ந்த மிளகாய் 10
  11. பூண்டு 100 கிராம்
  12. சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
  13. கரம் மசாலா தூள் ஒரு டீஸ்பூன்
  14. சாட் மசாலா தூள் சிறிது
  15. வெண்ணை 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும்
  2. காய்ந்த மிளகாயை விதை நீக்கி வெந்நீரில் அரை மணி நேரம் ஊற விடவும்
  3. மிளகாய் பேடகி மிளகாய் ஆக இருந்தால் நன்றாக கலர்கொடுக்கும்
  4. மிக்ஸியில் ஊறிய மிளகாய் பூண்டு சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து அரைக்கவும்
  5. பூண்டு மிளகாய் சட்னி ரெடி
  6. கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  7. வதங்கியதும் மஞ்சள் தூள் வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்
  8. உப்பு எலுமிச்சம்பழச் சாறு கொத்தமல்லி இலை சேர்க்கவும்
  9. நன்றாக கலந்து ஆறவிடவும்
  10. ஆரிய மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வடை போல தட்டிக் கொள்ளவும்
  11. கடாயில் வெண்ணெய் விட்டு இருபுறமும் வறுத்து எடுக்கவும்
  12. மற்றொரு கடாயில் வெண்ணெய் விட்டு அதில் ஒரு ஸ்பூன் பூண்டு மிளகாய் சட்னி கொத்தமல்லி இலை சேர்த்து லேசாக வதக்கவும்
  13. வதக்கிய மிளகாய் சட்னியில் பாவ் பிரட்டை வறுத்து எடுக்கவும்
  14. பின்னர் அதன் நடுவில் வறுத்த உருளைக்கிழங்கு பட்டீஸ் வைத்து அதன்மேல் வெங்காயம் வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்