வீடு / சமையல் குறிப்பு / நெல்லை ஏர்வாடி ஸ்பெஷல் குமிழ் வடகம்

Photo of Nellai Eruvadi special Koomil Vadakam by Fathima Sujitha at BetterButter
1245
1
0.0(0)
0

நெல்லை ஏர்வாடி ஸ்பெஷல் குமிழ் வடகம்

Oct-08-2018
Fathima Sujitha
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நெல்லை ஏர்வாடி ஸ்பெஷல் குமிழ் வடகம் செய்முறை பற்றி

வகை வகையான வடகங்கள் வந்துவிட்டாலும், ஏர்வாடிக்காரர்களுக்கு என்னவோ ஏர்வாடி வடகத்தின் சுவைக்கு அவைகள் ஈடாவதில்லை...மொறு மொறுவென்று சாப்பிடுவதற்கு மென்மையாகவும், சுவையில் அருமையாகவும் இருக்கும்..!!

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி (புழுங்கல்) - 1 கிலோ
  2. சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
  3. மிளகாய் - 8
  4. கறிவேப்பில்லை - ஒரு கொத்து
  5. எள்ளு - 25 கிராம்
  6. சீரகம் - 25 கிராம்
  7. உப்பு - தேவையான அளவு
  8. காயப் பொடி - (தேவைப்பட்டால் காயப்பொடி கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்)

வழிமுறைகள்

  1. அரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. அதை தண்ணீர் கொஞ்சம் விட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. மிளகாய், சின்ன வெங்காயம்,கறிவேப்பில்லை அனைத்தையும் பொடியாக கட் செய்து வைத்து கொள்ளவும்.
  4. அரைக்கப்பட்ட அரிசி மாவில் அதே அளவுக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நண்றாக காய்ச்ச வேண்டும்.
  5. கட்டி பிடிக்காமல் கை விடாமல் கிளறவும்.
  6. கையால் மாவை எடுத்து குமிழ் குமிழாக வைக்கும் அளவுக்கு மாவு கட்டியானதும், அடுப்பிலிருந்து இறக்கி, சூடு ஆறியதும், வெட்டி வைத்த சின்ன வெங்காயம் ,கருவேப்பில்லை, மிளகாய் மற்றும் எள்ளு, சீரகம், தேவையான அளவுக்கு உப்பு போட்டு கலக்க வேண்டும்
  7. தூய்மையான துணியில் குமிழ் குமிழாக வைத்து வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.
  8. இரண்டு நாள்கள் நல்ல வெயிலில் காய விடவும்.
  9. காய்ந்ததும் துணியிலிருந்து எடுத்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் சுவை மிக்க குமிழ் வடகம் தயார் ...!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்