BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / நெல்லை ஏர்வாடி ஸ்பெஷல் வெங்காய வடகம்

Photo of Nellai Eruvadi special Onion Vadakam by Fathima Sujitha at BetterButter
0
0
0(0)
0

நெல்லை ஏர்வாடி ஸ்பெஷல் வெங்காய வடகம்

Oct-08-2018
Fathima Sujitha
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நெல்லை ஏர்வாடி ஸ்பெஷல் வெங்காய வடகம் செய்முறை பற்றி

மிகவும் விரும்பி சாப்பிடும் ஓர் துணை உணவு இது ...சின்ன வெங்காயத்தில் செய்வது ருசியோ அருமையாக இருக்கும்... வெளியூர் வாசிகளுக்கு இந்த வடகம் பற்றி தெரியாமலும் இருக்கலாம்.. நல்ல வெயில் காலங்களில் இதை ட்ரை பண்ணி பாருங்க ... வெங்காய வடகத்திற்கு மிக முக்கியமாக நல்ல வெயிலில் காய்ந்து இருக்க வேண்டும்... நம்ம வீட்டுல பொரிச்சா பக்கத்து வீடு வரை மணக்கும் வெங்காய வடகத்தை எப்டி செய்யலாம்னு பார்ப்போம் ..!!

செய்முறை டாக்ஸ்

  • గుడ్డు-లేని
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ఉడికించాలి
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சின்ன வெங்காயம் - 1 கிலோ
  2. உளுந்து - 100 கிராம்
  3. பூடு - 50 கிராம்
  4. வெந்தயம் -5 கிராம்
  5. சீரகம் - 1 டிஸ்பூன்
  6. சோம்பு - 1 டிஸ்பூன்
  7. வத்தல் - 4
  8. பச்சை மிளகாய் - 4
  9. கருவேப்பிலை - தேவைக்கு
  10. பெருங்காயம் - 2டிஸ்பூன்
  11. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. முதல் நாள் இரவே சின்ன வெங்காயத்தை நல்ல பொடியாக கட் பண்ணி வைக்கவும்.
  2. மறுநாள் காலை உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து, அதை மெது வடை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும் .
  3. பூண்டை தனியாக பேஸ்ட் ஆ அரைத்து எடுத்து கொள்ளவும்.
  4. வெந்தயம், சீரகம், சோம்பு, வத்தல் ( காய்ந்த மிளகாய்) இவற்றை மிக்சியில் போட்டு தூள் மாதிரி பொடி பண்ணிக் கொள்ளவும்.
  5. பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
  6. இனி, அரைத்த உளுந்தில் சின்ன வெங்காயம், அரைத்த பொடி, பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கருவேப்பில்லை, பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணி வைத்து கொள்ளவும்
  7. ஒரு தூய்மையான துணியை விரித்து அதில் வடகம் காய வைக்க வைப்பது போல் வைத்து நல்ல வெயிலில் காய விடவும்...வெங்காய ஈரம் இருந்தால் மறுநாளும் வெயிலில் காய வைக்கவும்.
  8. வெங்காய வடகம் நன்கு காய்ந்து ரெடியானதும் எண்ணெய்யில் பொரித்து எடுத்து சாப்பிடவும்... வெங்காய வடகம் கருகி விடாமல் பொரித்தெடுக்கவும்...
  9. சுவையான நெல்லை ஏர்வாடி ஸ்பெஷல் வெங்காய வடகம் ரெடி...!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்