வீடு / சமையல் குறிப்பு / தஞ்சாவூர் பால் கொழுக்கட்டை

Photo of Tanjore paal kozhukattai by Sathya Vijay at BetterButter
454
1
0.0(0)
0

தஞ்சாவூர் பால் கொழுக்கட்டை

Oct-08-2018
Sathya Vijay
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தஞ்சாவூர் பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

தஞ்சாவூர் பால் கொழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி மாவு ஒரு கப்
  2. பாகு வெல்லம் கால் கிலோ
  3. தேங்காய்ப்பால் ஒரு கப்
  4. ஏலக்காய் சிறிதளவு
  5. வெந்நீர் 2 கப்
  6. பச்சைக் கற்பூரம் சிறிதளவு
  7. குங்குமப்பூ சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளவும்
  2. இப்பொழுது பச்சரிசி மாவுடன் ஒரு துளி உப்பு சேர்த்து கொதித்த தண்ணீரை அதில் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. பாகு வெல்லத்தை நீர் சேர்த்து நன்கு காய்ச்சிக் கொள்ளவும்
  4. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து பிசைந்த மாவை முறுக்கு அச்சில் இட்டு நன்கு பிழிந்து கொள்ளவும்
  5. இப்பொழுது மாவை சிறு தீயில் நன்கு வேக விடவும்
  6. தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்
  7. வெந்நீரில் மாவு நன்கு வெந்து மேலே வரும் பொழுது அதனுடன் வெல்லத்தை வடிகட்டி ஊற்றிக் கொள்ளவும்
  8. வெல்லம் நன்கு கொதித்து வரும் பொழுது தேங்காய்ப்பாலை ஊற்றிக் கொள்ளவும்
  9. இப்பொழுது இதனுடன் வறுத்த முந்திரி ஏலக்காய் பச்சை கற்பூரம் சிறிதளவு மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க விடவும்
  10. இப்பொழுது சுவையான தஞ்சாவூர் பால் கொழுக்கட்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்