வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி இருட்டு கடை அல்வா

Photo of Triunelveli Iruttuu kadai Halwa by Mallika Udayakumar at BetterButter
773
1
0.0(0)
0

திருநெல்வேலி இருட்டு கடை அல்வா

Oct-08-2018
Mallika Udayakumar
550 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி இருட்டு கடை அல்வா செய்முறை பற்றி

அல்வா என்ற பெயர் கேட்டாலே நாம் எல்லாருக்கும் நினைவுக்கு வரும் ஒரே ஊர் திருநெல்வேலி தான். அதுவும் அங்கே தயாரிக்கப்படும் இருட்டு கடை அல்வாவைசாப்பிட்டால், அதன் சுவை உங்கள் நாவில் தங்கி விடும்.இருட்டுக்கடை அல்வாவின் ருசி அவர்கள் அனைத்தும் கையிலே செய்வது தான், அந்த ருசி வேண்டும் என்றால் நீங்களும் இது போல் செய்யுங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சம்பா கோதுமை - 250 கிராம்
  2. சர்க்கரை -500 கிராம்(750கிராம் வரைஅதிகமாகவும் சேர்க்கலாம்)
  3. நெய் - 200-300 கிராம்,
  4. நெய்யில் வருத்த முந்திரி - 1கப்(தேவையான அளவு ) 
  5. ஏலக்காய்த்தூள் -  1/2 -1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோதுமையை முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊறவைக்க வேண்டும் குறைந்தது 8 மணி நேரம் அல்லது ஓர் இரவு. கோதுமை ஊறிய பின்பு மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். கோதுமையை அரைக்க அரைக்க பாலாக பொங்கும்.
  2. சம்பா முழு கோதுமைக்கு பதில் உடைத்த சம்பா கோதுமையும் பயன்படுத்தலாம்.கோதுமை பால் எடுப்பதற்கு முன் ஊற வைத்தை நன்கு வடிக்கட்டி கொள்ளவும்.
  3. கோதுமை பால் எடுக்க புதிய தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  4. வடிகட்டவும்
  5. நன்றாக கோதுமையை மை போல் அரைத்து பால் எடுதக்கவும்
  6. அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்
  7. பின்னர்
  8. அதனை 1-2 மணி நேரம் வரை மூடி வைக்கவும்
  9. சர்க்கரை -500கிராம்,நெய்-200கிராம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.நான் இரண்டையும் அளவாக எடுத்து உள்ளேன், நீங்கள் வேண்டும் என்றால் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.
  10. பால் மற்றும் நீர் பிரிந்து காணப்படும்.
  11. இந்த பாலை அப்படியே வைத்து விட்டால் கெட்டியான பால் அடியில் தங்கி நீர் மேலே வந்துவிடும் அந்த நீரை நீக்கி விடுங்கள்.
  12. கோதுமை கெட்டியான பால் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
  13. பிறகு அதை அளக்கவும்.ஒரு பெரிய டம்ளர் அளவு பால் கிடைத்துள்ளது.
  14. அதற்கு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
  15. இதனை அப்படியே வைத்து விட்டு
  16. வாணலியில் அளந்து வைத்துள்ள சர்க்கரை சேர்த்து (ஒரு சிறிய கப்பல் தனியாக வைக்கவும்), அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கலக்கவும்.
  17. இன்னோரு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுக்கவும், இன்னும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள சர்க்கரையை, பொன்னிறமாக வதக்கவும்
  18. அது கலர் மாறும் போது சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  19. சர்க்கரை நன்கு கரையும் வரை கலக்கி பிறகு மேல் பாத்திரத்தில் உள்ள கேரமலைஸ்டூ சர்க்கரையும் சேர்த்து கலக்கவும்.
  20. பாகு காய்ச்சவும்
  21. ஒரு கம்பி பதம் வரும்வரை காய்ச்சவும்
  22. பதம் வந்ததும் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள கோதுமை பாலை இதில் கலந்து கொள்ளவும்
  23. சிறிது நேரம் கழித்து நெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
  24. மிதமான தீயில் வைத்து கலக்கவும் .
  25. பாலும், சர்க்கரையும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது,நெய்யை சேர்த்து ஊற்றிக் கிளற வேண்டும்.
  26. கிளறிக்கொண்டிருக்கும்போதே அல்வா குங்கும நிறத்திற்கு மாறிவரும்.கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேல் ஆகும்
  27. வருத்த முந்திரியை சேர்த்து கலக்கவும்
  28. நான் ஏலக்காய் தூள் சேர்த்து கொண்டேன்
  29. நன்கு அல்வா பதம் வரும் வரை கலக்கி கொண்டே இருக்க வேண்டும்
  30. வேண்டும் என்றால் அதிகமாக முந்திரி பருப்பு சேர்த்து கொள்ளவும்
  31. நெய்விட்டு கிளறி கொண்டே இருக்கவும்.
  32. ஓரங்களில் நெய் வெளியே வந்ததும்
  33. இதே திருநெல்வேலி இருட்டு கடை அல்வா தயார்.எத்தனை கப் வந்து உள்ளது என்று பாருங்கள்.....250கிராம் சம்பா கோதுமையில்...
  34. அருமையாக வீட்டிலேயே செய்து அசத்தவும்.நன்றாக ஆறியபின்பு எடுத்துச் சாப்பிட்டால் இருட்டுக்கடை அல்வாவின் ருசி அப்படியே இருக்கும். இந்த இருட்டுக்கடை திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் எதிர் புறம் உள்ளது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்