வீடு / சமையல் குறிப்பு / மதுரை மட்டன் சூப்

Photo of MADURAI MUTTON SOUP by Saranya Nagarajan at BetterButter
777
0
0.0(0)
0

மதுரை மட்டன் சூப்

Oct-09-2018
Saranya Nagarajan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மதுரை மட்டன் சூப் செய்முறை பற்றி

சுவையான, கைமணம் மாறாத மதுரகாரங்க சூப்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நள்ளியெழும்பு mutton 1/4kg
  2. சின்ன வெங்காயம் 1/2 கப்
  3. தக்காளி 1 பழம்
  4. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  7. மிளகு தூள் 1 ஸ்பூன்
  8. மிளகு 5
  9. ஜீரகம் 1/4 ஸ்பூன்
  10. நல்லெண்ணனை 4 ஸ்பூன்
  11. 2ஆம் தேங்காய் பால் 1 கப்
  12. முதல் தேங்காய் பால் 1 கப்
  13. கறிவேப்பிலை 1 கீத்து
  14. மல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. குக்கர் சூடுபடுத்தி, நல்லெண்ணெய் ஊற்றி மிளகு, ஜீரகம் சேர்க்கவும்
  2. நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை செல்லும் வரை வதக்கவும்
  4. நறுக்கிய தக்காளி சேர்த்து, உப்பு , மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மசியும் பக்குவம் வரும் வரை வதக்கவும்
  5. இடை இடையில் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்
  6. இப்போது கறி துண்டுகள் சேர்த்து , பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
  7. இப்போது 2ஆம் தேங்காய் பால் 1 கப் , கறி முங்க தண்ணீர் சேர்த்து குக்கர் மூடவும்
  8. 20 நிமிடம் low flame ல் வேக விடவும்
  9. Pressure இறங்கியதும் முதல் தேங்காய் பால் சேர்த்து கலந்து விடவும்
  10. பரிமாறும் பொழுது மல்லி கறிவேப்பிலை சேர்த்து, மிளகு பொடி தூவி கொடுக்கவும்
  11. சிறப்பான மதுரை சூப் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்