வீடு / சமையல் குறிப்பு / சென்னை பேமஸ் வடகறி

Photo of Chennai hotel style vadacurry by hajirasheed haroon at BetterButter
48
1
0.0(0)
0

சென்னை பேமஸ் வடகறி

Oct-09-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சென்னை பேமஸ் வடகறி செய்முறை பற்றி

சென்னைல ரொம்ப பேமஸ் வடகறி இட்லி தோசை ஆப்பம் சப்பாத்தி ஆகியவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிட சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலைப்பருப்பு 1 கப்
  2. என்னை 100 மில்லி
  3. பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை சோம்பு தாளிப்பதற்கு
  4. வெங்காயம்-3
  5. தக்காளி-2
  6. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்
  7. மஞ்சள்தூள் 1
  8. மிளகாயத்தூள் 1டேபிள்ஸ்பூன்
  9. கரம் மசாலா கால் டேபிள்ஸ்பூன்
  10. உப்பு-1 ஸ்பூன்
  11. பச்சை மிளகாய் ஒன்று
  12. மல்லி புதினா இலை 1 பின்ச்

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை ஊற வைத்துக் கொள்ளவும்
  2. கடலைப்பருப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் கடலைப் பருப்புடன் சிறிது உப்பு சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. தோசை தவாவில் கடலைபருப்பு சிறிய அடைகளாக சுட்டு எடுக்கவும்
  4. இருபுறமும் பொன்னிறமானதும் அதை எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும்
  5. எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை போட்டு பொரியவிடவும் பிறகு வெங்காயம் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுது தக்காளி உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறவும்
  6. மசாலா பச்சை வாசனை போனவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் தண்ணீர் கொதி வந்தவுடன் கடலைப் பருப்பை சேர்த்து நன்கு வேக விடவும்
  7. பிறகு மல்லி இலை புதினா சேர்த்து பரிமாறலாம் சுவையான வட கறி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்