வீடு / சமையல் குறிப்பு / வட்டிலப்பம்

Photo of Vattilappam by Nazeema Banu at BetterButter
430
1
0.0(0)
0

வட்டிலப்பம்

Oct-09-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வட்டிலப்பம் செய்முறை பற்றி

முகவை மாவட்டம் கீழக்கரையில் ரம்ஜான் பண்டிகையில் செய்யப்படும் சுவையான இனிப்பு வகை.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • பண்டிகை காலம்
  • முகலாய்
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தேங்காய் இரண்டு
  2. முட்டை 15
  3. சீனி இரண்டு கப்
  4. நெய் கால் கப்
  5. முந்திரி திராக்ஷை தே.அளவு
  6. ஏலக்காய் 5

வழிமுறைகள்

  1. தேங்காயை துருவி சிறிது தண்ணீர் ஊற்றி திக்கான பாலாக எடுக்கவும்.
  2. அந்த பாலை ஊற்றி மீதி தேங்காய் துரவலை அரைத்து மேலும் பால் எடுக்கவும்.
  3. இவ்வாறு எடுத்த பால் நான்கு கப் அளவு வரும்.
  4. அதை அரைமணி நேரம் பிரிட்ஜில் வைத்து மேலாக உள்ள திக்கான பாலை மட்டும் எடுக்கவும்.
  5. அதை ஒரு பவுலில் போட்டு ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி அடித்துக்கலக்கவும்.
  6. அதனுடன் சீனி நெய் ஏலக்காய் சேர்த்து ஒன்று சேரும் வரை கையால் அடித்துக்கலக்கவும்.
  7. இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி கலவை உள்ள பாத்திரத்தை உள்ளே வைக்கவும்.
  8. அவ்வப்போது இட்லி பாத்திரம் வற்றி விடாமல் வட்டிலப்பம் வேகும் வரை தண்ணீர் ஊற்றவும்.
  9. கிட்டத்தட்ட இப்படி வேக ஒரு மணி நேரம் ஆகும்.
  10. அடுப்பை நிதானமாக எரிய விடவும்.
  11. நடுவில் ஒரு குச்சியால் குத்தி ஒட்டாத பதம் வரும் போது அடுப்பை அணைக்கவும்.
  12. நெய்யில் பொரித்த முந்திரி தூவி துண்டுகள் போடவும்.
  13. தே.பால் திக்காக இருந்தால் மட்டுமே இப்படி துண்டுகள் போட வரும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்