வீடு / சமையல் குறிப்பு / கீரை வடை | தண்டுக்கீரை - உளுந்து பஜ்ஜி

Photo of Keerai vada | Amaranath Leaves-Urad Dal Fritters by Babitha Costa at BetterButter
889
14
0.0(0)
0

கீரை வடை | தண்டுக்கீரை - உளுந்து பஜ்ஜி

Jul-03-2016
Babitha Costa
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுந்து - 1 கப்
  2. சிறு கீரை/ தண்டுக்கீரை - 1/2 கொத்து
  3. இஞ்சி, நறுக்கப்பட்டது 2 தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் - 1, பொடியாக நறுக்கப்பட்டது
  5. உப்பு - சுவைக்கேற்ற அளவு
  6. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பருப்பைச் சுத்தப்படுத்தித் தண்ணீரில் 2-3 மணி நேரம் ஊறவைக்கவும். அதன் பின் மிகக் குறைவானத் தண்ணீர் சேர்த்து பருப்பைச் சாந்து பதத்தில் அரைத்துக்கொள்ளவும். (குறைந்தபட்சத் தண்ணீர் சேர்க்கவும்)
  2. கீரையைப் பொடியாக நறுக்கி, தண்ணீரில் அழுக்குகளை நீக்கச் சுத்தப்படுத்திக்கொள்ளவும். பிழிந்து அதிலிருந்து எல்லா தண்ணீரையும் பிழிந்துவிடவும்.
  3. நறுக்கப்பட்ட பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு ஆகியவற்றை அரைத்த உளுந்து மாவில் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பொரிப்பதற்கு எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
  4. மூடியில் கொஞ்சம் தண்ணீர் தடவி, எலுமிச்சை அளவு தயாரிக்கப்பட்ட கலவையிலிருந்து உருண்டை பிடித்து மெதுவாகத் தட்டி மத்தியில் ஓட்டை போட்டுக்கொள்ளவும்.
  5. தயாரிக்கப்பட்ட வடையை சூடான எண்ணெயில் விட்டு பொன்னிறமாகும்வரை பொரிக்கவும். மீதமுள்ள மாவுக்கும் இதையே செய்யவும். செய்து முடித்ததும் சமையல் பேப்பர் உதவியால் கூடுதல் எண்ணெயை வடிக்கட்டிக்கொள்ளவும்.
  6. தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்