வீடு / சமையல் குறிப்பு / காரைக்குடி special செட்டிநாட்டு காலை சிற்றுண்டி வகைகள்

Photo of Karaikudi special dissess by Reshma Babu at BetterButter
605
4
0.0(0)
0

காரைக்குடி special செட்டிநாட்டு காலை சிற்றுண்டி வகைகள்

Oct-09-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
240 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காரைக்குடி special செட்டிநாட்டு காலை சிற்றுண்டி வகைகள் செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • கடினம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 1 கவுனி அரிசி செய்ய தேவையான பொருட்கள்
  2. கவுனி அரிசி 100 கிராம்
  3. தேங்காய் அரை மூடி
  4. சக்கரை 200 கிராம்
  5. நெய் 2 குழிக்கரண்டி
  6. உப்பு தேவையான அளவு
  7. 2 ஜவ்வரிசி புட்டு செய்ய தேவையான பொருட்கள்
  8. ஜவ்வரிசி 100 கிராம்
  9. நெய் ஒரு குழிக்கரண்டி
  10. தேங்காய்ப்பூ சிறிதளவு
  11. சீனி 150 கிராம்
  12. பச்சரிசி மாவு 2 கைப்பிடி
  13. உப்பு தேவையான அளவு
  14. 3 கந்தரப்பம் செய்ய தேவையான பொருட்கள்
  15. பச்சரிசி ஒரு டம்ளர்
  16. உளுந்தம் பருப்பு ஒரு கைப்பிடி
  17. கருப்பட்டி 100 கிராம்
  18. தேங்காய் அரை மூடி
  19. உப்பு தேவையான அளவு
  20. 4 கருப்பட்டி பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்
  21. பச்சை அரிசி 200 கிராம்
  22. புழுங்கல் அரிசி 200 கிராம்
  23. உளுந்தம் பருப்பு 100 கிராம்
  24. கருப்பட்டி 200 கிராம்
  25. ஏலக்காய் பொடி இரண்டு டீஸ்பூன்
  26. நெய் தேவையான அளவு
  27. உப்பு தேவையான அளவு
  28. 5 பால் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்
  29. உளுந்தம் பருப்பு 100 கிராம்
  30. பச்சரிசி 50 கிராம்
  31. தேங்காய் ஒன்னு
  32. எண்ணை தேவையான அளவு
  33. உப்பு தேவையான அளவு
  34. 6 உளுந்த வடை செய்ய தேவையான பொருட்கள்
  35. உளுந்தம் பருப்பு 100 கிராம்
  36. பச்சரிசி மாவு 2 டீஸ்பூன்
  37. வெங்காயம் ஒன்று
  38. கருவேப்பிலை ஒரு கைப்பிடி
  39. மல்லித்தழை சிறிதளவு
  40. உப்பு தேவையான அளவு
  41. எண்ணெய் தேவையான அளவு
  42. 7 வெண்பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்
  43. பச்சரிசி 200 கிராம்
  44. பாசிப் பருப்பு 50 கிராம்
  45. சீரகம் ஒரு டீஸ்பூன்
  46. மிளகு ஒரு டீஸ்பூன்
  47. பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு டீஸ்பூன்
  48. பச்சைமிளகாய் 2
  49. முந்திரிபருப்பு 10
  50. நெய் 2 குழிக்கரண்டி
  51. உப்பு தேவையான அளவு
  52. 8 வெள்ளை பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்
  53. பச்சரிசி ஒரு டம்ளர்
  54. உளுந்தம் பருப்பு ஒரு கைப்பிடி
  55. உப்பு தேவையான அளவு
  56. எண்ணை தேவையான அளவு
  57. 9 காரப் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்
  58. பச்சரிசி 100 கிராம்
  59. புழுங்கல் அரிசி 100 கிராம்
  60. உளுத்தம் பருப்பு 50 கிராம்
  61. வெங்காயம் ஒன்று
  62. கடுகு உளுத்தம்பருப்பு சிறிதளவு
  63. கடலைப் பருப்பு ஒரு கைப்பிடி
  64. கருவேப்பிலை மல்லி இலை சிறிதளவு
  65. உப்பு தேவையான அளவு
  66. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 1 கவுனி அரிசி செய்ய
  2. கவுனி அரிசியை 12 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. உரிய கவுனி அரிசியை எடுத்து குக்கரில் போட்டு உப்பு சிறிதளவு சேர்த்து 5 விசில் விடவும்
  4. கவுனி அரிசி நன்கு வெந்தவுடன் அதில் நெய் சேர்த்து
  5. பிறகு தேங்காய் பால் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்
  6. பிறகு அதனை ஒரு பவுலில் எடுத்து பரிமாறவும்
  7. சுவையான கவுனி அரிசி ரெடி
  8. 2 ஜவ்வரிசி புட்டு
  9. ஜவ்வரிசியை தண்ணீரில் போட்டு 10 மணி நேரம் ஊற விடவும்
  10. ஊறிய ஜவ்வரிசியை எடுத்து தண்ணீரை நன்கு வடிகட்டி அதில் உப்பு மற்றும் பச்சரிசி மாவு சேர்த்து நன்கு கிளறவும்
  11. பிறகு ஒரு இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டில் வைத்து வேக விடவும்
  12. 5 நிமிடம் கழித்து நன்கு வெந்தவுடன் எடுக்கவும்
  13. அதனை ஒரு பௌலில் போட்டு நெய் சக்கரை தேங்காய்ப்பூ சேர்த்து நன்கு கிளறவும்
  14. பிறகு ஒரு பௌலில் போட்டு பரிமாறவும் சுவையான ஜவ்வரிசி புட்டு ரெடி
  15. 3 கந்தரப்பம்
  16. அரிசி உளுந்து ஊறவைத்து அரைத்து அதனுடன் தேங்காய் உப்பு மற்றும் கருப்பட்டி தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  17. எண்ணெய் சூடானதும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்
  18. சுவையான கந்தரப்பம் ரெடி
  19. 4 கருப்பட்டி பணியாரம்
  20. அரிசி உளுந்து ஊற வைத்து அரைத்த மாவை எடுத்துக் கொள்ளவும் மாவில் காய்ச்சிய கருப்பட்டி சாறை ஊற்றவும் பிறகு ஏலக்காய் பொடி உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  21. பணியாரச் சட்டியில் நெய் ஊற்றி மாவை எடுத்து ஊற்றவும்
  22. மறுபுறம் வேகவிட்டு எடுக்கவும்
  23. சுவையான கருப்பட்டி பணியாரம் ரெடி
  24. 5 பால் பணியாரம்
  25. உளுந்து மற்றும் அரிசியை ஊற வைத்து அரைத்துக் உப்பு சேர்த்து கொள்ளவும்
  26. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை எடுத்து பொடிப்பொடியாக உருண்டைகளை போடவும்
  27. உருண்டைகள் நன்கு வெந்தவுடன் எடுக்கவும்
  28. பிறகு தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும் பிறகு அதில் உப்பு மற்றும் சீனி சேர்த்து பொரித்த உருண்டைகளை பாலில் போட்டு ஊற விடவும்
  29. சுவையான பால் பணியாரம் ரெடி
  30. 6 உளுந்த வடை
  31. உளுந்தம் பருப்பை ஊறவைத்து கிரைண்டரில் போட்டு அரைத்து மாவு எடுத்துக் கொள்ளவும் அதில் உப்பு பச்சரிசி மாவு பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை மல்லி இலைகளை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  32. ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை எடுத்து உளுந்து வடை போல் தட்டி பொரித்தெடுக்கவும்
  33. சுவையான உளுந்து வடை ரெடி
  34. 7 வெள்ளைப் பணியாரம்
  35. அரிசி மற்றும் உளுந்து ஊற வைத்து அரைத்த மாவை எடுத்துக் கொள்ளவும் அதில் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும்
  36. ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து அதில் ஊற்றவும்
  37. இரு புறம் வெந்தவுடன் எடுத்து மிளகாய்ச் சட்னியுடன் பரிமாறவும்
  38. சுவையான வெள்ளை பணியாரம் ரெடி
  39. 8 வெண்பொங்கல்
  40. பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்
  41. ஒரு குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு சீரகம் முந்திரி பருப்பு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்
  42. பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  43. தண்ணீர் கொதி வந்ததும் அரிசி பருப்பைப் போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்
  44. சுவையான வெண் பொங்கல் ரெடி
  45. 9 கார பணியாரம்
  46. அரிசி மற்றும் உளுந்தை ஊற வைத்து மாவு அரைத்துக் கொள்ளவும்
  47. ஒரு வடசட்டியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு வெங்காயம் மல்லி இலைகள் கருவேப்பிலை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  48. நன்கு வதங்கியவுடன் அதை மாவில் போட்டு கிளறவும்
  49. பிறகு ஒரு பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றி மாவை எடுத்து ஊற்றவும்
  50. ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் வேகவிடவும்
  51. சுவையான கார பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்