வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு நண்டு கிரேவி

Photo of Chettinadu Crab Gravy by Jayasakthi Ekambaram at BetterButter
527
0
0.0(0)
0

செட்டிநாடு நண்டு கிரேவி

Oct-09-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு நண்டு கிரேவி செய்முறை பற்றி

செட்டிநாடு மசாலா வைத்து செய்யும் நண்டு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நண்டு அரை கிலோ
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி-2
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  5. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  6. தனியா தூள் 2 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை ஒரு கொத்து
  8. கொத்தமல்லி தழை அரை கைப்பிடி அளவு
  9. கல் உப்பு 1 1/4 ஸ்பூன்
  10. வறுத்து அரைப்பதற்கு:
  11. தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
  12. சீரகம் ஒரு ஸ்பூன்
  13. மிளகு அரை ஸ்பூன்
  14. காய்ந்த மிளகாய் இரண்டு
  15. சோம்பு முக்கால் ஸ்பூன்
  16. எண்ணெய் 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நண்டை நன்றாக கழுவி ஒரு பக்கமாக வைக்கவும்
  2. வெங்காயம் தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்
  3. வறுத்த மசாலாக்களை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்
  5. எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும்
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்
  7. மிளகாய்த்தூள் தனியாத்தூள் வறுத்து அரைத்த பொடி எல்லாவற்றையும் போட்டு வதக்கவும்
  8. கறிவேப்பிலை சேர்க்கவும்
  9. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போடவும்
  10. தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் நண்டுகளை அதில் சேர்க்கவும்
  11. மூடி வைத்து நன்றாக வேக வைக்கவும்
  12. குழம்பு கெட்டி பதம் வந்தவுடன் ஆப் செய்யவும்
  13. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி தழை தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்