வீடு / சமையல் குறிப்பு / பாலத்துறை விருந்து ( நெய் சாதம் , எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு , கோவக்காய் fry , பழம் பிரட்டல் )

Photo of Paalathuarai viruthu (ghee rice , yennai kathirigai, kovakai fry , palam piratal ) by sowmya shriram at BetterButter
694
1
0.0(0)
0

பாலத்துறை விருந்து ( நெய் சாதம் , எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு , கோவக்காய் fry , பழம் பிரட்டல் )

Oct-09-2018
sowmya shriram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாலத்துறை விருந்து ( நெய் சாதம் , எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு , கோவக்காய் fry , பழம் பிரட்டல் ) செய்முறை பற்றி

பாலத்துறை விருந்து சாப்பாடுகளில் நெய் சாதம் முக்கிய உணவாக இருக்கும்.அதற்கு பொருத்தமாக எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு , கோவக்காய் fry, பழம் பிரட்டலை இனிப்பாக வைப்பார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நெய் சாதம் :
  2. சீராக சம்பா அரிசி - 1 கப்
  3. நெய் - 2 டேபிள்ஸ்பூன்
  4. வெங்காயம் – 1
  5. முந்திரி – 5
  6. பட்டை - 2
  7. கிராம்பு - 3
  8. ஏலக்காய் – 1
  9. பச்சை மிளகாய் – 3
  10. பச்சை பட்டாணி – ½ கப்
  11. புதினா- சிறிதளவு
  12. உப்பு - தேவையான அளவு
  13. தண்ணீர்
  14. ________________________
  15. எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு:
  16. சின்னவெங்காயம் - 6
  17. பூண்டு - 4
  18. கத்திரிக்காய் - 3
  19. தக்காளி - 1
  20. மிளகாய்த்தூள்-1டேபிள்ஸ்பூன்
  21. மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
  22. மல்லித்தூள்-1½டேபிள்ஸ்பூன்
  23. தேங்காய் - சிறிதளவு
  24. பொட்டுக்கடலை- சிறிதளவு
  25. உப்பு - தேவையான அளவு
  26. எண்ணெய்
  27. கடுகு - சிறிதளவு
  28. கருவேப்பில்லை - சிறிதளவு
  29. நெல்லிக்காய் அளவு புளி (ஊறவைத்து)
  30. _________________________
  31. கோவக்காய் fry :
  32. கோவக்காய் – 200 gm
  33. அரிசி மாவு – 2 டி ஸ்பூன்
  34. சோள மாவு - 2 டி ஸ்பூன்
  35. மிளகாய் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
  36. உப்பு - தேவையான அளவு
  37. மஞ்சள் தூள் – 1/2 டி ஸ்பூன்
  38. கரம் மசாலா தூள் – 1 டி ஸ்பூன்
  39. ஜீரக தூள் - 1 டி ஸ்பூன்
  40. எண்ணெய் (பொறிக்க தேவையான அளவு )
  41. _________________________
  42. பழம் பிரட்டல்:
  43. நேந்திரம் பழம் - 1
  44. திக் தேங்காய் பால் – ¼ கப்
  45. நெய் - தேவையான அளவு
  46. சக்கரை – தேவையான அளவு
  47. ஏலக்காய் – சிறிதளவு

வழிமுறைகள்

  1. நெய் சாதம் :
  2. அரிசியை நன்கு கழுவி, 30 நிமிடம் ஊறவைக்கவும்.
  3. ஒரு குக்கரில் நெய் ஊற்றி பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் , முந்திரி, வெங்காயம், பச்சை மிளகாய், புதினா வதக்கிகொள்ளவும் .
  4. பின்பு பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
  5. அரிசி சேர்த்து நன்கு வதக்கி,1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ,தேவையான அளவு உப்பு சேர்த்து 2 விசில் விட்டு எடுத்தால் சுவையான நெய் சாதம் ரெடி.
  6. __________________________
  7. எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு:
  8. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து, சின்னவெங்காயம் , பூண்டு,தக்காளி சேர்த்து நன்கு வதக்கி , மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,மல்லித்தூள்,தேங்காய், பொட்டுக்கடலை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
  9. அதே கடாயில் எண்ணெய், கடுகு, கருவேப்பில்லை சேர்க்கவும்.
  10. கத்திரிக்காயை நான்கு பக்கம் கட் செய்து போஸ்டை ஸ்டப் செய்து, அதே கடாயில் சேர்த்து நான்கு வதக்கவும்.
  11. சிறிது நிறம் மாறியதும் பேஸ்ட்டை சேர்த்து , சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  12. கடைசியில் சிறிது புளி தண்ணீர் சேர்த்து இறக்கினால் , சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.
  13. _________________________
  14. கோவக்காய் fry :
  15. முதலில் கோவக்காய்யை கழுவி துடைத்து எடுத்து கொள்ளவும்.
  16. பின்பு சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும் அதில் மஞ்சள் தூள் , கரம் மசாலா தூள் , ஜீரக தூள் , உப்பு , அரிசி மாவு , சோள மாவு ஆகிவற்றை நன்றாக பிரட்டி எடுத்து கொள்ளவும்.
  17. அந்த பிரட்டலை ஒன்று ஒன்றாக எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான கோவக்காய் fry தயார்.
  18. _________________________
  19. பழம் பிரட்டல்:
  20. ஒரு கடாயில் நெய் விட்டு ரௌண்டாக நறுக்கிய பழத்தை ஓவ்வொரு பழமாக சேர்த்து வதக்கிக்கொள்ளவும் .
  21. பொன்நிறமாக வதக்கியபின்பு , சக்கரை சேர்த்து அது கரைந்தனுடன் ,திக் தேங்காய் பால் சேர்த்து வதக்கவும்.
  22. சக்கரை , திக் தேங்காய் பால் முழுவதும் பழம் உரித்துக்கொள்ளும் , பிறகு ஏலக்காய், நெய் விட்டு பரிமாறினால் சுவையான பழம் பிரட்டல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்