வீடு / சமையல் குறிப்பு / சூரிய கூட்டு ( நெல்லை ஸ்பெஷல்)

Photo of Sooriya Kootu (Nellai Special) by Sowmya Sundar at BetterButter
305
0
0.0(0)
0

சூரிய கூட்டு ( நெல்லை ஸ்பெஷல்)

Oct-09-2018
Sowmya Sundar
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சூரிய கூட்டு ( நெல்லை ஸ்பெஷல்) செய்முறை பற்றி

பொங்கல் பண்டிகையின் போது பூசணிக்காயை சூரியனுக்கு படைத்து பின் இந்த கூட்டை கிராமங்களில் செய்வார்கள். சூரியனுக்கு படைப்பதால் இந்த பெயர் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மஞ்சள் பூசணிக்காய் 1/4 கிலோ
  2. வெள்ளை பூசணிக்காய் 1/4 கிலோ
  3. கொண்டைக்கடலை 1/2 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  6. பெருங்காயம் 1/2 டீஸ்பூன்
  7. தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
  8. கடுகு உளுத்தம் பருப்பு தலா அரை டீஸ்பூன்
  9. மிளகாய் வற்றல் 1
  10. கறிவேப்பிலை சிறிது
  11. அரைக்க
  12. தேங்காய் துருவல் 1/2 கப்
  13. பச்சை மிளகாய் 4
  14. சீரகம் 1 டீஸ்பூன்
  15. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் மஞ்சள் மற்றும் வெள்ளை பூசணிக்காயுடன் சிறிது தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்
  2. முதல் நாள் இரவே கொண்டைக்கடலையை தண்ணீர் விட்டு ஊற வைத்து காலையில் குக்கரில் வேக வைத்து வடித்து கொள்ளவும்
  3. அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்
  4. காய் வெந்ததும் வேக வைத்த கொண்டைகடலை மற்றும் அரைத்து வைத்த விழுது, பெருங்காயம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு ,மிளகாய்வற்றல், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்