வீடு / சமையல் குறிப்பு / நெல்லை ஏர்வாடி ஸ்பெஷல் ஓட்டு மாவு

Photo of Nellai Eruvadi special Oottu Maavu by Fathima Sujitha at BetterButter
649
0
0.0(0)
0

நெல்லை ஏர்வாடி ஸ்பெஷல் ஓட்டு மாவு

Oct-09-2018
Fathima Sujitha
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெல்லை ஏர்வாடி ஸ்பெஷல் ஓட்டு மாவு செய்முறை பற்றி

பாரம்பரிய உணவுகளில் ஓட்டு மாவும் ஒன்று ... விஷேஷ வீடுகள் வந்தால் பிரேத்தியேகமாக செய்வதுண்டு ...டிபனாகவும் வாழைப்பழம் பழம் போட்டு பினைந்தும் சாப்பிடலாம் பண்டமாகவும் சாப்பிடலாம்...ருசியாக இருக்கும்..!!

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு (வறுத்து அரைத்தது) - 1கிலோ
  2. முட்டை - 3
  3. தேங்காய் - 5
  4. நெய் - தேவையான அளவு
  5. சர்க்கரை - 100 கிராம்
  6. உப்பு - 2சிட்டிக்கை

வழிமுறைகள்

  1. இடியாப்ப மாவுக்கு ரெடி செய்வதை போல அரிசி மாவை வறுத்து அதை சல்லடையில் அரித்து எடுத்துக் கொள்ளவும்.
  2. தேங்காய்களை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
  3. தேங்காய் பால் திக்காக இருக்க வேண்டும்.
  4. தே.பாலுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி சிட்டிக்கை உப்பு சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.
  5. இதனுடன் மாவை சேர்த்து விரவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  6. அடி கனமான மாவு வறுக்கும் சட்டியை காய வைத்து அதில் ஊற வைத்து மாவை போட்டு வறுக்கவும்.
  7. குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.
  8. கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து வறுத்து இறக்கவும்.
  9. சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  10. சுவையான நெல்லை ஏர்வாடி ஓட்டு மாவு தயார்...!!
  11. இதை அப்படியே சாப்பிடலாம் வாழைப்பழம் சேர்த்து பிசைந்தும் உண்ணலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்