Photo of Chettiand marriagge thali by Adaikkammai Annamalai at BetterButter
440
4
0.0(1)
0

Chettiand marriagge thali

Oct-09-2018
Adaikkammai Annamalai
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • ஸ்டீமிங்
  • ஃப்ரீஸிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சாதம் உலை வைக்க;
  2. அரிசி - 2 உலக்கு
  3. தண்ணீர் - தேவையான அளவு
  4. உப்பு - சிறிது (உப்பு சேர்த்தால் சாதம் வெகு நேரத்துக்கு கெடாமல் இருக்கும்
  5. நெய் - 1 tsp
  6. பருப்பு கடைய ;
  7. பாசி பருப்பு - ஒரு அரை உலக்கு
  8. வரமிளகாய் - 2
  9. பூண்டு - 2
  10. உப்பு- சிறிது
  11. கம்பு லட்டு செய்ய;
  12. கம்பு - 1/2 கிலோ
  13. கருப்பட்டி - 1/2 கிலோ
  14. வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்.
  15. கீரை பருப்பு பொரியல் பொறிக்க;
  16. கீரை - 1 கட்டு
  17. சிறிய வெங்காயம் - 6
  18. மிளகாய் -3
  19. தேங்காய்- 1/2 மூடி (துறுவியது)
  20. வேக வைத்த பருப்பு - 1/2 கப்
  21. வெண்டைக்காய் பச்சடி செய்ய;
  22. வெண்டைக்காய் – 250 gm
  23. நறுக்கிய வெங்காயம் – 2
  24. நறுக்கிய தக்காளி – 2
  25. மஞ்சள் தூள் – 1/2 tsp
  26. சீரகத் தூள் – 1/2 tsp
  27. எண்ணெய், கடுகு – தாளிக்க தேவையான அளவு
  28. கருவேப்பில்லை – சிறிதளவு
  29. உப்பு - சிறிது
  30. வாழைக்க்காய் கருவாட்டு பொரியல் செய்ய;
  31. நன்கு முற்றின வாழைக்காய் - 2
  32. உப்பு - சிறிது
  33. எண்ணெய் - வறுக்க
  34. சோம்பு - 1/2 tsp
  35. வர மிளகாய் - 6
  36. கசகசா - 1 tsp
  37. முள்ளங்கி சாம்பார் செய்ய;
  38. முள்ளங்கி - 2 கப் தோலுரித்து நறுக்கவேண்டும்
  39. துவரம் பருப்பு - 1 கப்
  40. சின்ன வெங்காயம் - 10
  41. தக்காளி - 1
  42. கறிவேப்பிலை - சிறிதளவு
  43. பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
  44. மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
  45. மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
  46. தனியா தூள் - 1 டீஸ்பூன்
  47. உப்பு - சிறிது
  48. புளி - சிறிதளவு
  49. தண்ணீர் - 1 கப்
  50. தாளிப்பதற்கு;
  51. எண்ணெய் -1 tsp
  52. கடுகு, வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன்
  53. கத்திரிக்காய் கெட்டி குழம்பு செய்ய;
  54. சின்ன வெங்காயம் - 10
  55. தக்காளி - 2
  56. பூண்டு - 10 பல்
  57. கடுகு - 1/4 ஸ்பூன்
  58. வெந்தயம் - 1/2 ஸ்பூன்
  59. மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
  60. தனியா பொடி - 1
  61. மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
  62. புளி தண்ணீர் - 1 கப்
  63. நல்லெண்ணெய் - ஒரு குட்டி குளிகரண்டி
  64. கருவேப்பிலை - சிறிது
  65. உப்பு - சிறிது
  66. தயிர் உறைய வைக்க;
  67. பால் - 1 ltr
  68. உரைந்த தயிர் - 2 tsp
  69. வெண்ணிலா ஐஸ் கிரீம் செய்ய;
  70. பால் – 1/2 லிட்டர்
  71. சீனி -3/4 கப்
  72. விப் கிரீம் – 1 கப்
  73. வெண்ணிலா எஸன்ஸ் -1tsp
  74. ஜெலட்டின் -1 tsp
  75. கார்ன் ஃபளார் -1 tbsp
  76. அப்பளம் வறுத்து வைக்க வேண்டும்
  77. உப்பு - முதலில் பரிமாற வேண்டும்

வழிமுறைகள்

  1. சாதத்தை நன்கு 3 , 4 முறை அலசி தண்ணீர் சேர்த்து உலை வைத்து பொங்கியவுடன் சிமில் வைத்து உப்பு சிறிது போட்டு வெந்தவுடன் தண்ணீயை வடித்து இறக்கி ஒரு அகல பாத்திரத்தில் கொட்டவும் ,, சாதம் தயார்,,
  2. உப்பு பருப்பு செய்ய முதலீல் பாசி பருப்பை நன்கு அலசி குக்கறில் போட்டு பூண்டு 2 வரமிளகாய் இடித்து போட்டு தண்ணீர் சேர்த்து 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேக விடவும்,, வெந்த பின் இறக்கி உப்பு போட்டு மத்து வைத்து கடையவும், உப்பு பருப்பு தயார்
  3. கம்பு லட்டு செய்முறை ; கம்பை நன்றாக இடித்து கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையைச் சிறு துண்டுகளாக உடையும் அளவுக்கு இடித்து கொள்ளவும். கருப்பட்டியுடன் தண்ணீரைச் சேர்த்து, கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சிக்கொள்ளவும். கம்பு மாவையும், உடைத்த வேர்க்கடலையையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். 
  4. கருப்பட்டிபாகை, கம்பு மாவுடன் சிறிது சிறிதாகச் சேர்க்க வேண்டும். ஏனெனில், கருப்பட்டிபாகின் சூடு குறைந்தால், உருண்டை பிடிக்க வராது. கருப்பட்டிபாகினை அடுப்பில் லேசாகச் சூடு செய்துகொண்டே, சிறிது சிறிதாகச் சேர்த்து, உருண்டை பிடிக்க வேண்டும்.சுவையான சத்தான கம்பு லட்டு தயார்
  5. கீரை பருப்பு பொரியல் செய்ய; கீரையை நன்றாக அலம்பி இலைகளையும் சிறு தண்டுகளையும் பறித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
  6. இருப்பு சட்டியில் எண்ணை ஊற்றி கடுகு+ஊளுந்து+க.பருப்பு பொட்டு தாளித்துக்கொள்ளவும். பிறகு வெங்காயம், மிளகாய் பொட்டு வதக்கவும். இப்பொழுது கீரையை தண்ணீரிலிருந்து எடுத்து வாணலியில் போட்டு நன்கு வேக விடவும்(தண்ணீர் ஊற்ற வேண்டாம் ஏனென்றால் கீரையிலேயே தண்ணீர் விடும்). சிறிது நேரம் கழித்து உப்பு போட்டு கிளரி வேக வைத்த பாசி பருப்பை சேர்த்து தேங்காய் துறுவல் தூவி இறக்கி வைக்கவும். கீரை பருப்பு பொரியல் தயார்
  7. வெண்டைக்காய் பச்சடி ; வெண்டைக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.அதை கடாயில் போட்டு லேசாக எண்ணெய்யை ஊற்றி வதக்கவும். அதில் பிசுபிசுப்பு தண்மை மாறுவதற்கு இவ்வாறு செய்ய வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுந்து போட்டு, கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.
  8. வெங்காயத்தை போட்டு நன்கு வதங்கிய, பிறகு தக்காளியை போட்டு நன்கு மசியும் வரை வதக்கவும்.அதில் வதக்கிய வெண்டைக்காயை போட்டு வதக்கவும். அத்துடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள் சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 7 முதல் 10 நிமிடம் வேக வைக்கவும். சுவையான வெண்டைக்காய் பச்சடி தயார்
  9. வாழைக்காய் கருவாட்டு பொரியல்; முதலில் வாழைக்காயைத் தோல் சீவி, கொஞ்சம் கனமாக நீளமாக நறுக்கவும், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை பெருவெட்டாக அரைத்து, உப்பு சேர்த்து வாழைக்காய் துண்டுகளில் பிசறவும்.பின் இருப்பு சட்டியில் எண்ணெயைக் காயவைத்து, சோம்பு தாளித்து, வாழைக்காய் துண்டுகளைப் போட்டு, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.செட்டிநாட்டுக் கல்யாண விருந்தில், இது மிகவும் சிறப்பான உணவஹ் இந்த வாழைக்காய் கருவாட்டுப் பொரியல். முள்ளங்கி சாம்பார்; குக்கரில் அலசிய துவரம் பருப்பு, 3 கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள்தூள் போட்டு 4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், உப்பு, புளிக்கரைசல், பெருங்காயத்தூள் சேர்த்து பருப்பு வேகவைத்த குக்கரில் போடவும். முள்ளங்கியை சட்டியில் போட்டு 3 நிமிடம் வதக்கி அதை சாம்பாரில் போட்டு அடுப்பில் கொதிக்க வைத்து சாம்பார் நல்ல பக்குவத்துக்கு வந்ததும் அதன் மேலாக கொத்தமல்லி தூவி இறக்கினால் முள்ளங்கி சாம்பார் தயார்.
  10. கத்திரிக்காய் கெட்டி குழம்பு; கத்தரிக்காய்களை மேலாக காம்பை மட்டும் நறுக்கி விட்டு, மேலே உள்ள காம்பய் நீக்கி ஒரு கத்தறிக்காயை நான்கு பீசாக வரும்படி நறுக்கி கொள்ளவும். சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கி கொள்ளவும். வதக்கியதை ஆறவிட்டு தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
  11. எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும். பிறகு கத்தரிக்காயை போட்டு வதக்கி கொள்ளவும். பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். இதனுடன் மிளகாய், தனியா, மஞ்சள் பொடிகளை சேர்த்து கிளறவும். அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்து காய் வெந்து எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் இறக்கினால் கெட்டி குழம்பு தயார். தயிர் உரை வைக்க; முதலில் பாலை அடுப்பில் வைத்து பொங்கி வரும் வரை காய்ச்சி அடுப்பை குறைந்த தீயில் வைத்து மேலும் 3 நிமிடம் நன்றாக கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து கை பொறுக்கும் சூட்டிற்கு ஆறவிட்டு அதில் ஒரு ஸ்பூன் தயிர் விட்டு நன்றாக கரண்டியால் கலந்து இறுக்கமான மூடி போட்டு குறைந்தது 6 மணி நேரமாவது ஒரு இடத்தில் வைத்து விடவும். 6 மணி நேரம் கழித்து மூடியை திறந்து பார்த்தால் கெட்டியான ருசியான தயிர் தயாராகி இருக்கும்.
  12. அதனை பிரிட்ஜில் வைத்து தேவையான போது எடுத்து பயன் படுத்திக்கொள்ளலாம். புளித்த தயிர் வேண்டும் என்றால் இன்னும் சிறிது நேரம் வெளியில் வைத்திருந்து எடுத்து பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். இருட்டான இடத்தில் வைக்கவும், மண்பானை அல்லது பீங்கானில் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும் ,, சுவையான தயிரும் தயார்.
  13. பாயசம் அல்லது சூப்பு வைக்க வேண்டும் நான் அதற்கு பதிலாக ஐஸ்கிரீம் செய்துள்ளேன் வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்ய; கார்ன் ஃபளாரை 2tbsp குளிர்ந்த பாலில் கட்டி விலாமல் கலந்து வைக்கவும் ஜெலட்டினை 2tbsp வெது வெதுப்பான நீரில் 5-6 நிமிடம் ஊற வைக்கவும், பாலை அடுப்பில் வைத்து சிறிது வற்றும் வரை காய்ச்சவும். பிறகு சீனி சேர்த்து கரையும் வரை கிளறவும், பிறகு மிதமான தீயில் வைத்து சிறிது சிறிதாக கார்ன் ஃபளார் கலவையை சேர்த்து கட்டியாகும் வரை கிளறி விட்டு அமைப்பை அனைத்து விடவும் அதனை சூடு தனிய விடவும்,
  14. இதற்கிடையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதித்ததும் அதன் மேல் ஊற வைத்த ஜெலட்டின் பாத்திரத்தை வைத்து அது கரையும் வரை கிளறி …ஆறிய பாலில் சேர்த்து நன்கு கிளறி ஃபிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும், பிறகு வெளியில் எடுத்து அதனுடன் விப் கிரீம், வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்து ( egg beater) ஆல் நன்கு அடித்து மீண்டும் 2 மணி நேரம் வைத்து இன்னொரு முறை அடிக்கவும், நன்றாக கலவை அடித்த பிறகு ஃபிரிட்ஜில் வைத்து விட வேண்டும், செட் ஆனதும் எடுத்து பரிமாறவும், சுவையான ஐஸ்கிரீம் தயார் ,,
  15. அப்பாளத்தை வறுத்து எண்ணெயில் காற்று போகாத டப்பாவில் போட்டு பரிமாறவவவும், சுவையான செட்டிநாடு கல்யாண சப்பாடு தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Yasmin Shabira
Oct-10-2018
Yasmin Shabira   Oct-10-2018

Fantastic....:heart_eyes::heart_eyes::heart_eyes:

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்