வீடு / சமையல் குறிப்பு / நாகர்கோவில் ரச வடை

Photo of Nagercoil Rasa Vadai by Fathima Sujitha at BetterButter
878
0
0.0(0)
0

நாகர்கோவில் ரச வடை

Oct-09-2018
Fathima Sujitha
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நாகர்கோவில் ரச வடை செய்முறை பற்றி

நாகர்கோவில் மாவட்டத்தில் ரொம்ப பிரபலமான உணவுகளில் ரச வடையும் ஒன்று...வித்தியாசமான உணவு தான் ..எப்படி செய்யலாம்னு பார்ப்போம் ..

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வடை செய்ய :
  2. கடலை பருப்பு அல்லது பட்டாணி பருப்பு - 1 கப்
  3. காய்ந்த மிளகாய் - 5
  4. சின்ன வெங்காயம் - 1/4 கப்
  5. பொடியாக நறுக்கிய இஞ்சி- 1/2 டீஸ்பூன்
  6. பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
  7. கறிவேப்பில்லை - ஒரு கொத்து
  8. உப்பு - தே.அ
  9. எண்ணெய் - தே.அ
  10. ரச செய்ய :
  11. தக்காளி : 2
  12. புளி கரைசல் - தே.அ
  13. பெருங்காய பொடி - 1/4 டீஸ்பூன்
  14. கடுகு - 1/2 டீஸ்பூன்
  15. எண்ணெய் - தே.அ
  16. உப்பு - தே.அ
  17. கறிவேப்பில்லை - ஒரு கொத்து
  18. கொத்தமல்லி இலை - சிறிதளவு
  19. தண்ணீர் - தே.அ
  20. ரச மசாலா செய்ய :
  21. மிளகு - 1/2 டீஸ்பூன்
  22. சீரகம் - 1/2 டீஸ்பூன்
  23. தனியா - 1/2 டீஸ்பூன்
  24. காய்ந்த மிளகாய் - 1
  25. பூடு - 10 பல்
  26. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  27. கறிவேப்பில்லை - சிறிதளவு

வழிமுறைகள்

  1. வடை செய்ய : முதலில் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் நீர் வடித்து காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
  3. சாதரணமாக வடைக்கு அரைப்பதுபோல் கொரகொரப்பாக அரைக்காமல் ரவை பதத்தில் அரைத்தெடுக்கவும்
  4. அரைத்தெடுத்த பருப்போடு இஞ்சி பெருங்காயம் சின் வெங்காயம் கறிவேப்பில்லை உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  5. சிறு உருண்டைகளாக உருண்டி எடுத்து கொள்ளவும்.
  6. கடாயில் எண்ணெய் காய வைத்து சூடானதும் ஒவ்வொரு வடையாக உருண்டையாகவோ தட்டையாகவோ போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  7. பருப்பு வடை தயார் ...!!
  8. ரசம் செய்ய : அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்களை கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
  9. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்ததும் அரைத்த மசாலா மற்றும் பெரிய துண்டுகாளாகிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  10. தக்காளியின் மேல்தோல் மட்டும் சற்று பிரிந்தாற்போல் வந்ததும் புளிகரைசல் உப்பு நீர் சேர்க்கவும்.
  11. ரசம் நுரைத்து வரும் போது பெருங்காப்பொடி கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
  12. ரச வடை செய்ய : ரசத்தினை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் ஆறிய வடைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  13. பின் அப்படியே 2மணிநேரம் ஊறவைத்தால் வடைகள் 2மடங்காக உப்பியிருக்கும்.
  14. லேசாக சூடுபடுத்தி ரசவடையினை சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்