வீடு / சமையல் குறிப்பு / காயல் ஸ்பெஷல் கறி கஞ்சி

Photo of Kayal spl kari kanji(nonbu kanji) by Sumaiya shafi at BetterButter
1587
0
0.0(0)
0

காயல் ஸ்பெஷல் கறி கஞ்சி

Oct-09-2018
Sumaiya shafi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காயல் ஸ்பெஷல் கறி கஞ்சி செய்முறை பற்றி

காயல் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்ச அரிசி-1/2 கப்
  2. சிறுபருப்பு-2டீஸ்பூன்
  3. மஞ்சள் தூள்-2டீஸ்பூன்
  4. நெய்-100மில்லி
  5. பட்டை-2துண்டு
  6. ஏலம்-4
  7. லவங்கம்-4
  8. பிரியாணி இலை-சிறிதளவு
  9. பச்சை மிளகாய்-2
  10. இஞ்சி பூண்டு விழுது-2டீஸ்பூன்
  11. தயிர்-1 டீஸ்பூன்
  12. கருவேப்பிலை-2
  13. வெங்காயம்-1
  14. தக்காளி-1
  15. கேரட்-1(விருப்பப்பட்டால்)
  16. பீன்ஸ்-5(விருப்பப்பட்டால்)
  17. உருளை கிழங்கு-1
  18. மட்டன்-250கிராம்
  19. தேங்காய் பால்-2 கப்
  20. சிவப்பு மிளகாய் தூள்-2டீஸ்பூன்
  21. மல்லி தூள்-1டீஸ்பூன்
  22. புதினா-சிறிதளவு
  23. மல்லி இலை-சிறிதளவு
  24. உப்பு-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் பச்ச அரிசி,வறுத்த சிறுபருப்பு,மஞ்சள் தூள், தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து கொள்ள வேண்டும்.
  2. பின் அதை beater யில் நன்கு அடித்து கொள்ள வேண்டும்
  3. ஒரு குக்கரில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலம்,கருவேப்பிலை, பச்சை மிளகாய், பிரியாணி இலை,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. பின் வெங்காயம்,புதினா இலை,மல்லி இலை, சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கறி, சிவப்பு மிளகாய் தூள் அல்லது காயல் மசாலா தூள்,உப்பு சேர்த்து 5 -7whistle போடவும்.
  5. கறி நன்கு வெந்ததும், எழும்பு நீக்கி கறியை தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
  6. ஒரு சிறிய சட்டியில் தண்ணீர் ஊற்றி கேரட்,பீன்ஸ் மற்றும் உருளை கிழங்கு வேக வைத்து கொள்ளவும்.காய்கள் வேண்டாம் என்றால் இதை தவிர்க்கவும்.
  7. பின் ஒரு கனத்த பாத்திரத்தில் அடித்து வைத்த பச்ச அரிசி, வெந்த கறி, அதன் கிரேவி,வேக வைத்த காய், தேங்காய் பால் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.உப்பு சரி பார்த்து கொள்ளவும்.
  8. நன்கு கொதித்த பின், வேறு ஒரு தவாவில் நெய் ஊற்றி பட்டை,ஏலம்,லவங்கம், கருவேப்பிலை,சிறிது வெங்காயம் சேர்த்து வதக்கவும். அந்த தாலிப்பை கொதித்த கஞ்சியுடன் சேர்க்கவும்.
  9. சுவையான நோன்பு கஞ்சி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்