Photo of Chettinad chicken karoda by Adaikkammai Annamalai at BetterButter
816
3
0.0(1)
0

Chettinad chicken karoda

Oct-09-2018
Adaikkammai Annamalai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நாட்டு கோழி - 1 kg
  2. பட்டை, கிராம்பு - 2 
  3. சோம்புத்தூள் - 2 spoon
  4. ஏலக்காய் - 2 
  5. மஞ்சள்தூள் - 1/2 spoon
  6. மிளகாய்த் தூள்- 1 1/2 spoon
  7. தேங்காய் - 1 மூடி 
  8. உப்பு - தேவையான அளவு 
  9. இஞ்சி/பூண்டு விழுது - 3 spoon 
  10. காய்ந்த மிளகாய் - 4 
  11. தக்காளி - 250 gm
  12. சிறிய வெங்காயம் - 250 gm 
  13. எண்ணெய்

வழிமுறைகள்

  1. தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். நாட்டுக்கோழியை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  2. மிக்சியில் மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், சோம்புத்தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் இரண்டு ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன், தேங்காய், கசகசா, சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்
  3. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, ஏலக்காய், மிளகாய் முதலியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும். 
  4. அத்துடன் சிறிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.  வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  5. அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளி சிறிதளவு வதங்கியதும் சுத்தம் செய்த கோழியை சேர்த்து வதக்கவும். 
  6. நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும். கறி நன்றாக வெந்து கெட்டியாக வரும் நிலையில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும். இப்போது சுவையான செட்டிநாடு கோழி கரோடா தயார்,

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Yasmin Shabira
Oct-10-2018
Yasmin Shabira   Oct-10-2018

Semmaaa

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்