வீடு / சமையல் குறிப்பு / மதுரை கொத்து கறி

Photo of Madurai miced meat by Rachell Revathi Samuel at BetterButter
552
1
0.0(0)
0

மதுரை கொத்து கறி

Oct-09-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மதுரை கொத்து கறி செய்முறை பற்றி

மதுரை அசைவ உணவுகளுக்கு பெயர் பெற்றது.. அதில் கொத்து கறியும் ஒன்று..

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆட்டுக்கறி கொத்தியது(மட்டன் கொத்துக் கறி) 300 கிராம்
  2. எண்ணெய் 3 ஸ்பூன்
  3. பட்டை 1
  4. கிராம்பு 1
  5. ஏலக்காய் 1
  6. அன்னாசி பூ 1
  7. சோம்பு 1/2 ஸ்பூன்
  8. சிறிய வெங்காயம் 15-20
  9. கருவேப்பிலை சிறிது
  10. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  11. பெரிய தக்காளி 1
  12. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  13. மிளகாய்த்தூள் 1-2 ஸ்பூன்
  14. மல்லி தூள் 1 ஸ்பூன்
  15. கரம் மசாலா 1 ஸ்பூன்
  16. சீரகத்தூள் 1 ஸ்பூன்
  17. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மட்டன் கொத்துக் கறியை கழுவி மஞ்சள்தூள் போட்டு கிளறி வைக்கவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ சேர்க்கவும்.
  3. சோம்பு சேர்த்து வதக்கவும்.
  4. நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  6. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.த
  7. தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
  8. கொத்துக் கறியை சேர்க்கவும்.
  9. நன்றாக வதக்கவும்.
  10. கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
  11. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
  12. எண்ணெயில் மட்டனை சில நிமிடங்கள் வதக்கவும்.
  13. மட்டன் வேக தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.மட்டன் நன்றாக வேகும் வரை மூடி வைத்து வேக விடவும்.
  14. மட்டன் வெந்ததும் சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.
  15. எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  16. தண்ணீர் வற்றி மட்டன் வேகும் வரை காத்திருக்கவும். கொத்துக் கறி என்பதால் 15 நிமிடங்களில் வெந்து விடும்.
  17. சுவையான மதுரை கொத்துக் கறி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்