வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி சொதி

Photo of Tirunelveli sodhi by Rachell Revathi Samuel at BetterButter
475
1
0.0(0)
0

திருநெல்வேலி சொதி

Oct-09-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி சொதி செய்முறை பற்றி

திருநெல்வேலியில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த சொதி குழம்பு. இது இட்லி தோசை இடியாப்பம் மற்றும் சாதத்திற்கு ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் 1
  2. பீன்ஸ் 5-6
  3. முருங்கைக்காய் 4-5 துண்டுகள்
  4. உருளைக்கிழங்கு 1
  5. பச்சை பட்டாணி 3 ஸ்பூன்
  6. பாசிப்பருப்பு 1/4 கப்
  7. முதல் தேங்காய் பால் 1 கப்
  8. இரண்டாம் மூன்றாம் தேங்காய் பால் 2 கப்
  9. கடுகு 1/2 ஸ்பூன்
  10. சீரகம் 1/2 ஸ்பூன்
  11. வெங்காயம் 1
  12. பச்சை மிளகாய் 3
  13. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  14. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  15. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான காய்கறிகளை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் காய்கறிகளை சேர்த்து இரண்டாம் தேங்காய் பால் சேர்க்கவும்.
  3. பாசிப்பருப்பை கழுவி எடுத்துக் கொள்ளவும்.
  4. குக்கரில் உள்ள காய்கறி மேல் பாசிப்பருப்பு பாத்திரத்தை வைத்து தேவையான தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். பருப்பு மற்றும் காயை தனியாகவும் வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம்.
  5. தேங்காய் பாலில் வேக வைத்த காய்கறிகள்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  7. சீரகம் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  8. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  9. வேகவைத்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்.
  10. நன்றாக கலந்து கொள்ளவும்.
  11. வேகவைத்த பருப்பை சேர்க்கவும்.
  12. மஞ்சள்தூள் சேர்க்கவும்.
  13. நன்றாக கலந்து கொள்ளவும்.
  14. முதல் தேங்காய் பால் சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  15. தேங்காய் பால் சேர்த்து நன்றாக கொதி வந்ததும் இறக்கவும்.
  16. சுவையான திருநெல்வேலி சொதி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்