வீடு / சமையல் குறிப்பு / கோவில் பட்டி கடலை மிட்டாய்

Photo of Kovil patti kadalai mittai by Rachell Revathi Samuel at BetterButter
793
1
0.0(0)
0

கோவில் பட்டி கடலை மிட்டாய்

Oct-09-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோவில் பட்டி கடலை மிட்டாய் செய்முறை பற்றி

கடலை மிட்டாய் என்றாலே நினைவுக்கு வருவது கோவில்பட்டி தான். கோவில் பட்டி கடலை மிட்டாய் ஸ்பெஷல் ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நிலக்கடலை 1/2 கப்
  2. வெல்லம் 1/2 கப்
  3. அரிசி மாவு சிறிது

வழிமுறைகள்

  1. வறுத்த நிலக்கடலையை தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்.. அடுப்பில் வாணலியை வைத்து தோல் நீக்கிய கடலையை லேசாக வறுத்து கொள்ளவும்.
  2. அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெல்லம் சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
  3. வெல்லம் முழுவதும் உருகும் வரை காத்திருக்கவும்.
  4. வெல்லம் உருகியதும் வடிகட்டி கொள்ளவும்.
  5. அடுப்பில் வெல்லக் கரைசலை வைத்து பாகு காய்ச்சவும்.
  6. சரியான பாகு வரும் வரை கிளறவும்.
  7. தண்ணீர் உள்ள பாத்திரத்தில் வெல்லப் பாகை விடும் போது கரையாமல் அடியில் சென்று படிய வேண்டும்.
  8. பாகு தயார் ஆனதும் கடலையை சேர்க்கவும்.
  9. நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.வெல்லம் மற்றும் கடலை ஒன்று சேர்ந்து கெட்டியானதும் இறக்கவும்.
  10. தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி கொள்ளவும்.
  11. நெய் தடவிய தட்டில் பரப்பி வைக்கவும்.அரிசி மாவை தூவி கொள்ளவும்.சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  12. கோவில் பட்டி கடலை மிட்டாய் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்