வீடு / சமையல் குறிப்பு / கொங்கு நாடு அரிசி பருப்பு சாதம்

Photo of Kongu Nadu arisi paruppu sadham by Rachell Revathi Samuel at BetterButter
1064
1
0.0(0)
0

கொங்கு நாடு அரிசி பருப்பு சாதம்

Oct-09-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொங்கு நாடு அரிசி பருப்பு சாதம் செய்முறை பற்றி

கோயம்புத்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற சாத வகை.. கொங்கு நாட்டு பகுதிகளில் அடிக்கடி செய்யப்படும் உணவு வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எண்ணெய் 2 ஸ்பூன்
  2. கடுகு 1/4 ஸ்பூன்
  3. சீரகம் 1/2 ஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. பூண்டு 5-6 பற்கள்
  6. கருவேப்பிலை சிறிது
  7. பச்சை மிளகாய் 1
  8. தக்காளி 1
  9. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  10. அரிசி 3/4 கப்
  11. துவரம் பருப்பு 1/4 கப்
  12. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் பருப்பை தண்ணீரில் கழுவி ஊற வைக்கவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.சீரகம் சேர்த்து வதக்கவும்.
  3. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. பச்சை மிளகாய் பூண்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
  7. 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.. அரிசி மற்றும் பருப்பை சேர்க்கவும்.
  8. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  9. தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  10. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
  11. 3 விசில் விட்டு இறக்கிய பின் அரிசி பருப்பு சாதம்.
  12. சுவையான ஆரோக்கியமான கொங்குநாடு அரிசி பருப்பு சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்