வீடு / சமையல் குறிப்பு / மதுரை கறி தோசை

Photo of Madurai kari dosa by Rachell Revathi Samuel at BetterButter
770
1
0.0(0)
0

மதுரை கறி தோசை

Oct-09-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மதுரை கறி தோசை செய்முறை பற்றி

மதுரை அசைவ உணவுகளுக்கு பெயர் பெற்றது.அதில் கறி தோசை மிகவும் பிரசித்தி பெற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு 6தோசைக்கு
  2. முட்டை 6
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. கறி செய்வதற்கு: எண்ணெய் 3 ஸ்பூன்
  5. பட்டை 1
  6. கிராம்பு 1
  7. ஏலக்காய் 1
  8. அன்னாசி பூ 1
  9. சோம்பு 1/2 ஸ்பூன்
  10. சின்ன வெங்காயம் 20
  11. கருவேப்பிலை சிறிது
  12. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  13. தக்காளி 1
  14. கொத்துக் கறி 300கிராம்
  15. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  16. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  17. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  18. கரம் மசாலா 1 ஸ்பூன்
  19. சீரகத்தூள் 1 ஸ்பூன்
  20. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ சோம்பு சேர்த்து வதக்கவும்.
  2. நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
  6. மஞ்சள்தூள் சேர்த்த கொத்துக் கறி சேர்த்து வதக்கவும்.
  7. கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  8. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  9. கறி வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
  10. எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.
  11. கறி நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் அடுப்பில் இருந்து இறக்கவும்.கொத்துக் கறி தயார்.
  12. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.
  13. சுற்றிலும் மற்றும் தோசை மேல் எண்ணெய் விட்டு கொள்ளவும்.
  14. முட்டை உடைத்து தோசை மேல் ஊற்றவும்.
  15. தோசை கரண்டி வைத்து முட்டையை தோசை முழுவதும் பரப்பி விடவும்.
  16. கொத்துக் கறியை தோசை மீது பரப்பி வைத்து எண்ணெய் விட்டு கொள்ளவும்.
  17. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  18. சுவையான மதுரை கறி தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்