வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு வத்தக்குழம்பு

Photo of Chettinad Vathakulambu by Jayanthy Asokan at BetterButter
1045
0
0.0(0)
0

செட்டிநாடு வத்தக்குழம்பு

Oct-09-2018
Jayanthy Asokan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு வத்தக்குழம்பு செய்முறை பற்றி

செட்டிநாடு வத்தல் குழம்பு செய்வதற்கு வெங்காயம் தக்காளி புளி மற்றும் அன்றே பருப்பு மசாலா பொருட்களை அரைத்து உடனே செய்ய வேண்டும் இதுவே மிகவும் ருசியாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சுண்டைக்காய் வத்தல் 2 மேஜைக்கரண்டி
  2. புளி ஒரு எலுமிச்சை அளவு
  3. பெரிய வெங்காயம் 1
  4. தக்காளி-3
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. நல்லெண்ணெய் 4 மேஜைக்கரண்டி
  7. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை இரண்டு கொத்து
  9. வத்த குழம்பு பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள்
  10. காய்ந்த மிளகாய் 6
  11. கொத்துமல்லி விதைகள் 1 மேசைக்கரண்டி
  12. துவரம் பருப்பு 1 தேக்கரண்டி
  13. மிளகு 1/4 தேக்கரண்டி
  14. கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
  15. உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
  16. சீரகம் 1/4 தேக்கரண்டி
  17. வெந்தயம் 1/4 தேக்கரண்டி
  18. எண்ணெய் வறுக்க 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் வத்தக் குழம்பு பொடி செய்வதற்கான அனைத்து பொருட்களையும் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்
  2. அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சுண்டைக்காயை வறுத்து தனியே வைத்து கொள்ள வேண்டும்.
  3. பின் நல்லெண்ணெய்யை ஊற்றி வெங்காயத்தை வதக்கிக் கொள்ள வேண்டும்
  4. பெருங்காயத் தூளை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்
  5. தக்காளியை சேர்த்து நன்கு குழையும் வரை வதக்க வேண்டும்
  6. வறுத்த வத்தக் குழம்பு மசாலாவை பொடி செய்து கொள்ள வேண்டும்
  7. மஞ்சள்பொடி வத்தக் குழம்பு பொடி உப்பு தேவைக்கேற்ப சேர்க்க வேண்டும்
  8. எலுமிச்சை அளவு புளியை நன்கு 1 கப் தண்ணீரில் கரைத்து கெட்டியாக கலவையில் சேர்கவும்
  9. குறைந்த தணலில் நன்கு வேக வைக்க வேண்டும்
  10. வறுத்து சுண்டைக்காயை அதனுள் சேர்க்க வேண்டும்
  11. எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை குறைந்த தணலில் இருத்தல் வேண்டும்
  12. எண்ணெய் பிரிந்து மேலே வந்தபின் கருவேப்பிலை சேர்க்க வேண்டும்
  13. இதுவே செட்டிநாடு ஸ்பெஷல் வத்தக்குழம்பு ஆகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்