வீடு / சமையல் குறிப்பு / கோவை காளான் (கோயம்புத்தூர் ஸ்பெஷல்)

Photo of Kovai kalan (Coimbatore Spl) by Mallika Udayakumar at BetterButter
1525
2
5.0(0)
0

கோவை காளான் (கோயம்புத்தூர் ஸ்பெஷல்)

Oct-09-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோவை காளான் (கோயம்புத்தூர் ஸ்பெஷல்) செய்முறை பற்றி

கோயமுத்தூர் ஸ்பெஷல் காளான்...ங்க. ரோட்டுக்கடைகளில் இது மிகவும் பிரபலமான காளான் மசாலாங்கோ... . அனைவரும் விரும்பி உண்ணும் உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை கோஸ்-1கப்( பொடியாக நறுக்கியது)
  2. மைதா மாவு-1கப்
  3. கார்ன் பிளவர் மாவு-1/2 கப்
  4. இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள்-1ஸ்பூன்
  6. காஸ்மீரீ மிளகாய்த்தூள்-1ஸ்பூன்
  7. தண்ணீர்-தேவையானவை
  8. எண்ணெய்- வறுக்க
  9. வறுக்க தேவையான பொருட்கள்:-
  10. எண்ணெய்-1டேபிள் ஸ்பூன்
  11. பச்சை மிளகாய்-2 ( நறுக்கியது)
  12. பெரிய வெங்காயம்-1/2(நறுக்கியது)
  13. கருவேப்பிலை-15
  14. மல்லித்தழை -சிறிதளவு
  15. இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்
  16. கரம் மசாலா தூள்-1/2ஸ்பூன்
  17. மிளகாய்த்தூள்-1ஸ்பூன்
  18. காஷ்மீரீ மிளகாய்த்தூள்-1ஸ்பூன்
  19. உப்பு- தேவையான அளவு
  20. தக்காளி சாஸ்-1-2ஸ்பூன்
  21. சோயா சாஸ்-1ஸ்பூன்
  22. வினிகர்- 1/4 ஸ்பூன்
  23. கார்ன் பிளவர் மாவு -1ஸ்பூன் (தண்ணீரில் கலந்தது)
  24. தண்ணீர் -தேவையானவை

வழிமுறைகள்

  1. முட்டை கோஸ் பொடியாக நறுக்கவும், மைதா, கார்ன் பிளவின், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், காஷ்மீரீ மிளகாய்த்தூள் (சிகப்பு கலர் சேர்க்க வில்லை), உப்பு , தேவையான பொருட்கள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. அனைத்தையும் சேர்த்து கலந்து அதில் தேவையான தண்ணீர் தெளித்து கலக்கவும்.இந்த கலவையை 10 நிமிடம் ஊற விடவும்.தேவைப்படடால் மைதா மாவை அதிகம் சேர்க்கலாம்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் மேற்கலந்ததை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  4. நான் சிகப்பு கலர் சேர்க்காத தால் இந்த நிலையில் வரும்.
  5. இப்படி அனைத்தையும் வறுத்து எடுக்கவும்.
  6. பிறகு வறுக்க தேவையான அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம்
  7. தேவைப்பட்டால் கலர் மற்றும் அஜீனே மோட்டோ சேர்க்கலாம்.
  8. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  9. நன்றாக வனக்கியதும் அதில் மிளகாய்த்தூள்,கஸ்மீரீ மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், உப்பு
  10. மற்றும் சோயா சாஸ், தக்காளி சாஸ்திரம் சேர்த்து கலந்து கொள்ளவும்.அதில் கார்ன் பிளவர் மாவு சிறிது தண்ணீர் ஊற்றி காய்ந்ததை ஊற்றவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து விடவும்.,
  11. தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் .
  12. இரண்டு நிமிடத்திற்கு பிறகு வறுத்தையும் அதில் சேர்க்கவும்.அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கவும்.மல்லிதழை சேர்த்து நன்கு கலந்து
  13. அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கவும்.மல்லிதழை சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
  14. சூடாக பரிமாறவும்.இதே இதே உங்கள் கோவை காளான் ஸ்பெஷல் தயார்.
  15. மிக அருமையா இருக்குங்க !!! நீங்களும் உங்கள் வீட்டில் செய்து அசத்துங்க!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்