வீடு / சமையல் குறிப்பு / எங்க ஊரு வஞ்சிற மீன் குழம்பு(திருவல்லூர் மாவட்டம் இராமஞ்சேரி கிராமம்)

Photo of ENGA ooru meen kulambu(thiruvallur ) by Shobana Rajesh at BetterButter
278
1
0.0(0)
0

எங்க ஊரு வஞ்சிற மீன் குழம்பு(திருவல்லூர் மாவட்டம் இராமஞ்சேரி கிராமம்)

Oct-09-2018
Shobana Rajesh
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

எங்க ஊரு வஞ்சிற மீன் குழம்பு(திருவல்லூர் மாவட்டம் இராமஞ்சேரி கிராமம்) செய்முறை பற்றி

இந்த வஞ்சிரம் மீன் குழம்பு என்னுடைய கணவருடைய ஊருல நான் கத்துகிட்ட சமையலில் ஒன்று ,மிகவும் எளிமையான சுவையான ஒன்று ,முயற்சி செய்து பாருங்கள். இதோ செய்முறை உங்களுக்காக

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேவையான பொருட்கள்:
  2. வஞ்சிர மீன் 4 துண்டு
  3. வெங்காயம் பெரியது ஒன்று
  4. தக்காளி பெரியது ஒன்று
  5. பூண்டு பற்கள் 10 நசுக்கி கொள்ள வேண்டும்
  6. புளி 1 பெரிய நெல்லிக்காய் அளவு
  7. குழம்பு மிளகாய் தூள் இரண்டு மேஜைக்கரண்டி
  8. மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
  9. கடுகு வெந்தயம் தலா 1 டீ கரண்டி
  10. காய்ந்த மிளகாய் 4
  11. கறிவேப்பிலை ஒரு கொத்து
  12. நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி

வழிமுறைகள்

  1. செய்முறை:
  2. முதலில் வஞ்சிரம் மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும் அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அலசி வைத்துக் கொள்ள வேண்டும்
  3. இப்பொழுது வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை நல்லெண்ணெய் கடாயில் ஊற்றி கடுகு வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் தாளித்து வெங்காயத்தை நன்றாக பொன்னிறமாக வறுக்க வேண்டும்
  4. இப்பொழுது நசுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்றாக வறுத்து வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் இப்பொழுது தேவையான மிளகாய்த்தூள் உப்பு சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வதக்கி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதி வைக்க வேண்டும்
  5. மிளகாய்த்தூள் வாடை போன பின்பு அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒரு கொதி வந்ததும் கழுவி வைத்துள்ள மீனை அதனுள் சேர்த்து மிதமான தீயில் வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து குழம்பு பதம் வரும் வரை நன்றாக கொதி விட வேண்டும்
  6. இப்பொழுது அதுனுள் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து குழம்பு பதம் வரும் வரை சரிபார்த்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்