வீடு / சமையல் குறிப்பு / மதுரை மாப்பிள்ளை விருந்து

Photo of Madurai mapillai virundhu by poorani Kasiraj at BetterButter
1218
0
0.0(0)
0

மதுரை மாப்பிள்ளை விருந்து

Oct-09-2018
poorani Kasiraj
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மதுரை மாப்பிள்ளை விருந்து செய்முறை பற்றி

மதுரை மாப்பிள்ளை விருந்து

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் குழம்பிற்கு தேவையான பொருட்கள்
  2. நெத்திலி மீன் அரை கிலோ
  3. கல்லுப்பு
  4. புளி ஒரு எலுமிச்சை அளவு
  5. தேங்காய் துருவல் மற்றும்
  6. சின்ன வெங்காயம் 10
  7. பூண்டு 4 பல்
  8. தக்காளி-2
  9. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  10. மல்லி தூள் 3ஸ்பூன்
  11. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  12. நல்லெண்ணெய் 3 குழி கரண்டி￰
  13. கடுகு ஒரு ஸ்பூன்
  14. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  15. கருவேப்பிலை ஒரு கொத்து
  16. சிக்கன் 65 செய்வதற்கு
  17. சிக்கன் அரை கிலோ
  18. மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  19. காஷ்மீரி சில்லி தூள் 2 ஸ்பூன்
  20. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  21. தயிர் கால் கப்
  22. உப்பு தேவையான அளவிற்கு
  23. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை
  24. மிளகு தூள் அரை ஸ்பூன்
  25. அரிசி மாவு அரை கப்
  26. சோள மாவு 2 ஸ்பூன்
  27. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  28. மட்டன் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்
  29. மட்டன் ஒரு கிலோ
  30. சின்ன வெங்காயம் கால் கிலோ
  31. தக்காளி-3
  32. சீரகம் ஒரு ஸ்பூன்
  33. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  34. பட்டை ஒன்று
  35. கிராம்பு-2
  36. ஏலக்காய் ஒன்று
  37. அன்னாசி பூ 1
  38. கசகசா ஒரு ஸ்பூன்
  39. தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன்
  40. உப்பு தேவையான அளவு
  41. நல்லெண்ணெய் 4 கரண்டி
  42. கருவேப்பிலை 3 கொத்து
  43. வேகவைத்த முட்டை 2
  44. நட்ஸ் ஐஸ்கிரீம்

வழிமுறைகள்

  1. மீன் குழம்பு செய்வதற்கு
  2. மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்
  3. நீரை சுத்தம் செய்யும் போது கல் உப்பு சேர்த்து நன்கு சுத்தம் செய்யவும்
  4. பின்பு மீனுடன் தூள் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வைக்கவும்
  5. புளியை 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு வெந்தயம் பூண்டு சேர்த்து தாளிக்கவும்
  7. பூண்டு சிறிது வதங்கியதும் வெங்காயத்தை சேர்க்கவும்
  8. வெங்காயம் வதங்கியதும் தக்காளியை வதக்கவும்
  9. தக்காளி வதங்கியதும் மல்லித்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  10. நன்கு வெந்து சுருண்டு அதில் புளித்தண்ணீரை ஊற்றவும்
  11. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சிறிது வெங்காயம் சிறிது தக்காளி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
  12. குழம்பு கொதித்த உடன் தேங்காய் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்
  13. தேவையான உப்பு சேர்த்து மீனை சேர்த்து கொதிக்க விடவும்
  14. மீனை சேர்த்து பிறகு கிளற வேண்டாம்
  15. நன்கு மூடி வைத்து எண்ணெய் பிரிந்தததும் அனைத்து விடவும்
  16. மீன் குழம்பு ரெடி
  17. சிக்கன் 65 செய்வதற்கு
  18. சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  19. உப்பு சேர்த்து கழுவி கொள்ளவும்
  20. பின்பு நன்கு தண்ணீரை வடித்து சிக்கனை தனியாக எடுத்து விடவும்
  21. சிக்கனுடன் தயிர் உப்பு மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  22. அரை மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும்
  23. அரை மணி நேரத்துக்கு பிறகு அரிசி மாவு சோள மாவு சேர்த்து கிளறவும்
  24. உப்பு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்
  25. ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும்
  26. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
  27. எண்ணெய் சூடானவுடன் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்
  28. மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்
  29. சிக்கன் 65 ரெடி
  30. மட்டன் குழம்பு செய்வதற்கு
  31. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கவும்
  32. எண்ணெய் சூடானவுடன் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ கிராம்பு கசகசா சேர்த்து தாளிக்கவும்
  33. வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  34. தக்காளி சேர்த்து வதக்கவும்
  35. கறியை சேர்த்து நன்கு வதக்கவும்
  36. மல்லி தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  37. தேவையான உப்பும் தண்ணீரும் சேர்த்து குக்கரை மூடி விசில் விடவும்
  38. ஆறு ஏழு விசில் விடவும்
  39. அழுத்தம் குறைந்த பிறகு குக்கரை திறந்து விடவும்
  40. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காயை சீரகம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்
  41. இதனை குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும்
  42. மட்டன் குழம்பு ரெடி
  43. ஒரு இலையில் வெத்தலை பாக்கு ஊறுகாய் முட்டை பழம் ஐஸ்கிரீம்
  44. மூன்று வகை குழம்புகள் சோறுடன் பரிமாறவும்
  45. இதனுடன் ரசம் பள்ளிபாளையம் சிக்கன் குழம்பு இதெல்லாம் செய்து பரிமாறுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்