Photo of MUTTON KEEMA VADAI by Munsila Fathima at BetterButter
1443
0
0.0(0)
0

கறி வடை

Oct-09-2018
Munsila Fathima
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கறி வடை செய்முறை பற்றி

எங்கள் ஊர் மேலப்பாளையத்தில் பொதுவாக பீப் வைத்து தான் கறிவடை செய்வார்கள் இங்கு நான் மட்டன் கீமா வைத்து செய்துள்ளேன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் கீமா 250 கிராம்
  2. வெங்காயம் ஒன்று பெரியது
  3. பச்சை மிளகாய் 1 நறுக்கியது
  4. மல்லி இலை சிறிதளவு
  5. கடலை மாவு அரை மேசைக்கரண்டி
  6. உப்பு தேவைக்கு
  7. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  8. கறி மசாலா 2 தேக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி அளவு
  10. என்னை பொரித்தெடுக்க

வழிமுறைகள்

  1. கீமாவை நன்கு கழுவி தண்ணீரை வடிய வைத்துக் கொள்ளுங்கள்
  2. பின்பு ஒரு பாத்திரத்தில் கீமாவுடன் மிளகாய்த்தூள் மசாலாத்தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது சிறிது தண்ணீர் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து கொள்ளுங்கள்
  3. தண்ணீர் வற்றிய பின் அதனை ஆற வைத்து மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளுங்கள்
  4. அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் மல்லி இலை,கடலை மாவு சேர்த்து கொள்ளுங்கள்
  5. பின்பு மாவை நன்கு பிசைந்து கொண்டு உள்ளங்கையில் மெல்லிய வடையாக தட்டி வைத்துக் கொள்ளுங்கள்
  6. பின்பு ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி தட்டிவைத்த வடையை ஷாலோவ் ப்ரை செய்து கொள்ளுங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்