வீடு / சமையல் குறிப்பு / மதுரை ரோட்டுக்கடை எம்டி சால்னா(பரோட்டா விற்கு)

Photo of Madurai empty salna for parotta by Rachell Revathi Samuel at BetterButter
1148
1
0.0(0)
0

மதுரை ரோட்டுக்கடை எம்டி சால்னா(பரோட்டா விற்கு)

Oct-09-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மதுரை ரோட்டுக்கடை எம்டி சால்னா(பரோட்டா விற்கு) செய்முறை பற்றி

மதுரை ரோட்டோர கடைகளில் கிடைக்கும் எம்டி சால்னா.பரோட்டாவிற்கு சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எண்ணெய் 4 ஸ்பூன்
  2. பட்டை 1
  3. கிராம்பு 1
  4. ஏலக்காய் 1
  5. அன்னாசி பூ 1
  6. சோம்பு 1/2 ஸ்பூன்
  7. கசாகசா 1/4 ஸ்பூன்
  8. வெங்காயம் 1
  9. தக்காளி 1
  10. பிரியாணி இலை 1
  11. வெங்காயம் 1
  12. கருவேப்பிலை சிறிது
  13. கொத்தமல்லி தழை சிறிது
  14. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  15. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  16. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  17. தேங்காய் 1/4 கப்
  18. முந்திரி பருப்பு 5-6
  19. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ சோம்பு கசகசா சேர்த்து வதக்கவும்.
  2. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.
  4. ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
  6. நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  7. கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  8. மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
  9. கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  10. அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
  11. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கொள்ளவும்.
  12. மிக்ஸியில் தேங்காய் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  13. அரைத்த தேங்காய் சேர்த்து நன்றாக கொதி வந்ததும் இறக்கவும்.
  14. சுவையான மதுரை ரோட்டுக்கடை எம்டி சால்னா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்