வீடு / சமையல் குறிப்பு / கரூர் பேமஸ் கரம்ஸ்

Photo of Karur famous karams by Balajayasri Dhamu at BetterButter
1612
0
0.0(0)
1

கரூர் பேமஸ் கரம்ஸ்

Oct-09-2018
Balajayasri Dhamu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கரூர் பேமஸ் கரம்ஸ் செய்முறை பற்றி

1தக்காளி கரம்,2.தேங்காய் கரம், 3.வெங்காயம் கரம்,4.பீட்ரூட் கரம், 5.பொதினாகரம்,6.கொத்தமல்லி கரம், 7.மாஇஞ்சி கரம் இவை அனைத்தும் கருர் பேமஸ் கரங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. #1.தக்காளி கரம்:
  2. பொரி 1கப்
  3. தக்காளி2
  4. பெரியவெங்காயம்1
  5. வரமிளகாய்2
  6. பூண்டு3
  7. உப்பு தேவையான அளவு
  8. கேரட் வெங்காயம் துருவல்2ஸ்பூன்
  9. #2.தேங்காய் கரம்
  10. பொரி1கப்
  11. தேங்காய் துருவல்1/4மூடி
  12. பச்சை மிளகாய்
  13. பொட்டு கடலை1ஸ்பூன்
  14. கேரட் வெங்காயம் துருவல்
  15. உப்பு
  16. #3.வெங்காயம் கரம்:
  17. பொரி1கப்
  18. சின்ன வெங்காயம்10
  19. வரமிளகாய்2
  20. பூண்டு3(விருப்பம்)
  21. உப்பு
  22. கேரட் வெங்காயம் துருவல்3ஸ்பூன்
  23. #4.மா இஞ்சி கரம்
  24. பொரி 1கப்
  25. மா இஞ்சி3
  26. கேரட் வெங்காயம் துருவல்
  27. தக்காளி சட்னி1/2ஸ்பூன்
  28. கொத்தமல்லி சட்னி1/2ஸ்பூன்
  29. மிளகு தூள்1/2ஸ்பூன்
  30. #5.பீட்ரூட் கரம்:
  31. பீட்ரூட் துருவல்1கப்
  32. வெங்காயம் துருவல்
  33. பொரி1கப்
  34. தக்காளிசட்னி1ஸ்பூன்
  35. உப்பு தேவையான அளவு
  36. #6.பொதினாகரம்:
  37. பொதினா இலை1கப்
  38. தக்காளி1சிறியது
  39. பச்சை மிளகாய்2 (அ)வரமிளகாய்
  40. சின்ன வெங்காயம்5
  41. உப்பு தேவையான அளவு
  42. பொரி1கப்
  43. கேரட் வெங்காயம் துருவல்2ஸ்பூன்
  44. #7.கொத்தமல்லி கரம்
  45. கொத்தமல்லி தழை
  46. பச்சை மிளகாய்
  47. புளி
  48. பொரி1கப்
  49. கேரட் வெங்காயம் துருவல்2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அனைத்து சட்னிகளும் ரெடி செய்து கொள்ள வேண்டும்
  2. முதலில் கேரட்,பீட்ரூட், வெங்காயம், மா இஞ்சி துருவல் செய்ய வேண்டும்
  3. 1#தக்காளி கரம் : தக்காளி ,வெங்காயம், பூண்டு, வரமிளகாய் அனைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் பொரி கேரட், வெங்காயம் துருவல் ,தக்காளி பொடியாக நறுக்கியதை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  5. சட்னி சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்
  6. இப்போது தக்காளி கரம் ரெடி
  7. 2# தேங்காய் கரம்
  8. தேங்காய், பச்சை மிளகாய்,பொட்டு கடலை போன்றவை அரைத்து கொள்ளவும்
  9. பொரி ஒரு பாத்திரத்தில் போட்டு கொண்டு சட்னி சேர்த்து கேரட் வெங்காயம் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்
  10. தேங்காய் கரம் ரெடி
  11. 3#வெங்காயம் கரம்: வெங்காயம் ,வர மிளகாய் பூண்டு வதக்கி கொள்ளவும்
  12. மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  13. ஒரு பாத்திரத்தில் பொரி போட்டு கொண்டு அரைத்த சட்னி சேர்த்து கேரட் வெங்காயம் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.
  14. இப்போது வெங்காயம் கரம் ரெடி
  15. 4.மா இஞ்சி கரம் மா இஞ்சி தோல் நீக்கி துருவல் செய்து கொள்ள வேண்டும்
  16. ஒரு பாத்திரத்தில் பொரி போட்டு கொண்டு கேரட்துருவல், வெங்காயம்துருவல் ,மா இஞ்சி துருவல்சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  17. இதனுடன் தக்காளி சட்னி1/2ஸ்பூன் கொத்தமல்லி சட்னி1/2ஸ்பூன் சேர்த்து கலந்து பரிமாறவும்
  18. மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்
  19. இப்போது மா இஞ்சி கரம் ரெடி
  20. #5.பீட்ரூட் கரம் : பிட்ரூட் துருவல் செய்து கொள்ள வேண்டும்
  21. ஒரு பாத்திரத்தில் பொரி போட்டு கொண்டு பீட்ரூட் துருவல்,வெங்காயம் துருவல் , தக்காளி சட்னி, சேர்த்து நன்கு கலந்துபரிமாறவும்
  22. இப்போது பீட்ரூட் கரம் ரெடி
  23. 6.#பொதினாகரம் பொதினா இலை ,வெங்காயம், தக்காளி அனைத்தையும் வாணலியில் சேர்த்து வதக்கி கொள்ளவும்
  24. ஆறியதும் மிக்ஸியில் போட்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  25. இப்போது ஒரு பாத்திரத்தில் பொரி சட்னி, கேரட், வெங்காயம் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்
  26. இப்போது புதினா கரம் ரெடி
  27. 7.#கொத்தமல்லி கரம் கொத்தமல்லி தழை பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  28. ஒரு பாத்திரத்தில் பொரி சட்னி,கேரட், வெங்காயம் சேர்த்து கலந்து பரிமாறவும்
  29. இப்போது கொத்தமல்லி கரம் ரெடி
  30. அனைத்தையும் தட்டில் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்