வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் பால் கூட்டு

Photo of Pumpkin Milk Curry by Saivardhini Badrinarayanan at BetterButter
461
3
0.0(0)
0

பரங்கிக்காய் பால் கூட்டு

Oct-10-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் பால் கூட்டு செய்முறை பற்றி

சுவையான சிவப்பு பூசணி உடன் பால் செய்த கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிவப்பு பூசணிக்காய் 1 கப்
  2. பால் 1/2 கப்
  3. தேங்காய் 1/4 கப்
  4. பச்சைமிளகாய் 2
  5. வரமிளகாய் 1
  6. கருவேப்பிலை சிறிதளவு
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. தண்ணீர் (காய் வேக வைப்பதற்கு)

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய், கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரித்து பின் பொடியாக நறுக்கி வைத்த பூசணிக்காய் சேர்க்கவும்.
  2. காயை எண்ணெயில் நன்கு வாட்டிய பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான வேக வைக்கவும்.
  3. ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் கால் கப்,பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  4. காய் நன்கு வெந்த பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
  5. பின் உப்பு மற்றும் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. 5 நிமிடம் நன்கு கொதித்த பின் இறக்கி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்