வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் ஸ்டஃப்

Photo of Stuffed Snake Gourd by Rashitha Mufeed at BetterButter
440
3
0.0(0)
0

புடலங்காய் ஸ்டஃப்

Oct-11-2018
Rashitha Mufeed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் ஸ்டஃப் செய்முறை பற்றி

Best for rice and chappathi

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் துண்டுகள்-7 (ஒவ்வொன்றும் 4-5 அங்குலம் இருக்க வேண்டும்)
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம்-1
  3. பெரிதாக நறுக்கிய வெங்காயம்-1/2
  4. இஞ்சி -2inch (பொடியாக நறுக்கியது)
  5. பூண்டு பற்கள்-15
  6. சீரகம் -1 மேசைக்கரண்டி
  7. மல்லி -1தேக்கரண்டி
  8. நல்ல மிளகு -1/2தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  10. மிளகாய் தூள் -1/2தேக்கரண்டி
  11. கரம் மசாலா -1/3 தேக்கரண்டி
  12. உலர் மாம்பழ தூள் (அமுர் பவுடர்) -1/2 தேக்கரண்டி
  13. உப்பு தேவையான அளவு
  14. எண்ணெய்- 5 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் சீரகம், மல்லி, நல்லமிளகு, பெரிதாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு இவை அனைத்தையும் 2 மேசைக்கரண்டி தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து எடுக்க வேண்டும்.
  2. புடலங்காயின் உள்ள விதைகளை கத்தியை வைத்து நீக்கி வைக்க வேண்டும். (பின்னர் ,அதனை உபயோகப்படுத்த வேண்டும்.)
  3. கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு அது நன்றாக சூடான பின்னர்,சீரகம் இட்டு அது நன்கு பொரிந்த பின் அதில் வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
  4. வெங்காயம் நன்கு வதங்கிய பின் எடுத்து வைத்த புடலங்காய் விதைகளை அதனுள் சேர்க்க வேண்டும்.பின்னர் அரைத்த மசாலாவையும் அதனோடு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  5. பின்னர் அதனோடு மஞ்சள் தூள் ,மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. அதனை நன்கு எண்ணெய் பிரியும் வரை மெல்லிய தீயில் வதக்க வேண்டும் (மூடி வைத்து வதக்க வேண்டும்) தீயை அணைத்து வதக்கிய மசாலாவை ஆறவிடவும்.
  7. பின்னர் புடலங்காய் துண்டுகள் ஒவ்வொன்றிலும் மசாலாவை ஸ்டஃப் செய்யவும்.
  8. பின்னர் கடாயில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு அதனை மெல்லிய தீயில் சூடாக்கவும்.சூடான பின்னர்,புடலங்காய் துண்டுகள் ஒவ்வொன்றாக மூடி வைத்து மெல்லிய தீயில் 8 முதல் 10 நிமிடங்கள் வரை பொரித்து எடுக்கவும்.
  9. மெல்லிய தீயில் 8 முதல் 10 நிமிடங்கள் வரை பொரித்து எடுக்கவும் .எல்லா பக்கங்களையும் திருப்பி திருப்பி பொரித்து எடுக்கவும்.
  10. பின்னர்,தீயை அணைத்து ஒரு பாத்திரத்தில் அதனை மாற்றவும்.
  11. சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்