வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் முட்டை பொறியல்/ பிட்டர்கார்டு எஃக் புர்ஜி

Photo of Bitter gourd egg bhurji by Fathima Beevi at BetterButter
531
2
0.0(0)
0

பாகற்காய் முட்டை பொறியல்/ பிட்டர்கார்டு எஃக் புர்ஜி

Oct-11-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் முட்டை பொறியல்/ பிட்டர்கார்டு எஃக் புர்ஜி செய்முறை பற்றி

பாகற்காய் முட்டை பொறியல்/ பிட்டர்கார்டு எஃக் புர்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாகற்காய்-2
  2. முட்டை- 3
  3. பெரிய வெங்காயம்-1
  4. தேங்காய் எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
  5. உப்பு- தேவையான அளவு
  6. பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
  7. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  8. கரம் மசாலா - 1/4 டீ ஸ்பூன்
  9. கறிவேப்பிலை - ஒரு கொத்து
  10. மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
  11. மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
  12. பெரிய பச்சை மிளகாய் -1
  13. சீரகம்-1/4 டீஸ்பூன்
  14. தேங்காய் துருவல்- 3 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாகற்காயின் விதைகளை எடுத்து விட்டு பாகற்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. மசாலா விற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
  3. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. ஒரு வாணலியில்  எண்ணெய் ஊற்றி, சூடான பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. வெங்காயம் பொன்னிறம் ஆனதும்,  நறுக்கிய பாகற்காய், தேவையான அளவு உப்பு மற்றும் கருலேப்பில்லை சேர்த்து நன்கு வேக விடவும்.
  6. பாகற்காய் நன்கு வெந்ததவுடன்,  மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், கரம் மசாலா, மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.
  7. ஒரு பாத்திரத்தில் முட்டை, சிறிது உப்பு, ஒரு சிட்டிகை கரம் மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
  8. பாகற்காய் மசாலாவுடன் நன்கு வதங்கியதும், கலந்து வைத்துள்ள முட்டை கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
  9. முட்டை நன்கு வேகும் வரை மிதமான சூட்டில்  சமைக்கவும்.
  10. சூடான சாதம் அல்லது சப்பாத்தி உடன்  பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்