வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பொரிச்ச குழம்பு

Photo of Pudalangai Poricha Kuzhambu by Sowmya Sundar at BetterButter
0
3
0(0)
0

புடலங்காய் பொரிச்ச குழம்பு

Oct-12-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பொரிச்ச குழம்பு செய்முறை பற்றி

இதை புளியில்லா குழம்பு என்றும் கூறலாம்.புளி சேர்க்காமல் வறுத்து அரைத்து செய்யும் சுவையான குழம்பு வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • మిళితం
  • ఉడికించాలి
  • మితముగా వేయించుట
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் அரை கிலோ
  2. துவரம்பருப்பு 1/4 கப்
  3. தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்
  4. கடுகு 1 டீஸ்பூன்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. உப்பு தேவையான அளவு
  7. பெருங்காயம் 1/2 டீஸ்பூன்
  8. தேங்காய் துருவல் 1/4 கப்
  9. வறுத்து அரைக்க
  10. உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  11. மிளகு 1 டீஸ்பூன்
  12. சீரகம் 1 டீஸ்பூன்
  13. மிளகாய் வற்றல் 3

வழிமுறைகள்

  1. துவரம்பருப்பை தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக வேக வைத்து கொள்ளவும்.
  2. புடலங்காயை நறுக்கிக் கொள்ளவும்
  3. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.
  4. பின் அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்
  5. புடலங்காயை தண்ணீர் விட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.காய் வெந்ததும் பெருங்காயம் மற்றும் அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்
  6. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்