கடலைமாவு வெண்டைக்காய் மசாலா | Besan Bhindi Masala in Tamil

எழுதியவர் Lisha Aravind  |  25th Aug 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Besan Bhindi Masala recipe in Tamil,கடலைமாவு வெண்டைக்காய் மசாலா, Lisha Aravind
கடலைமாவு வெண்டைக்காய் மசாலாLisha Aravind
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

8194

0

கடலைமாவு வெண்டைக்காய் மசாலா recipe

கடலைமாவு வெண்டைக்காய் மசாலா தேவையான பொருட்கள் ( Ingredients to make Besan Bhindi Masala in Tamil )

 • வெண்டைக்காய் - 1/4 கிலோ /250 கிராம்
 • எண்ணெய் - 3 தேக்கரண்டி
 • பெருங்காயம் - ஒரு சிட்டிகை
 • சீரகம் - 1/2 டீக்கரண்டி
 • கடலைமாவு - 4 தேக்கரண்டி
 • மிளகாய்த் தூள் - 1/2 -1 டீக்கரண்டி
 • மல்லித்தூள் - 1 டீக்கரண்டி
 • மஞ்சள் தூள் - 1/4 டீக்கரண்டி
 • இஞ்சி - 1 இன்ச்
 • மாங்காய் பொடி - 1 டீக்கரண்டி
 • கரம் மசாலா தூள் - 1/4 டீக்கரண்டி
 • கொத்துமல்லி - 1 தேக்கரண்டி (நறுக்கியது)
 • உப்பு - சுவைக்கேற்ற அளவு

கடலைமாவு வெண்டைக்காய் மசாலா செய்வது எப்படி | How to make Besan Bhindi Masala in Tamil

 1. கடலை மாவை சிறு தீயில் நல்ல நறுமணம் வரும்வரை வதக்கவும். ஒரு தட்டிற்கு மாற்றி எடுத்து வைக்கவும்.
 2. வெண்டைக்காயைக் கழுவி நன்றாகத் தட்டி உலர்த்தவும். வெண்டையின் இரு முனையையும் நறுக்குக. வெண்டைக்காயை உடைக்காமல் பிளந்துகொள்க.
 3. ஒரு கடாயில 1 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி வெண்டைக்காயைச் சேர்க்கவும். மொறுமொறுப்பாக வரும்வரை வதக்கவும். இன்னொரு தட்டிற்கு மாற்றி எடுத்து வைக்கவும்.
 4. அதே கடாயில், மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து சீரகம் சேர்த்து வெடிக்கவிடவும். பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு நொடி வதக்கவும்.
 5. மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், மல்லித்தூள், இஞ்சி சேர்த்து மிதமானச் சூட்டில் வதக்கவும்.
 6. கடலை மாவு சேர்த்து நன்றாக வதக்கவும். சிறு தீயில் பச்சை வாடை இருந்தால் போகும்வரை வதக்கவும்.
 7. வறுத்த வெண்டையை கலவையோடு சேர்த்து உப்பு, மாங்காயத் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒட்டுமொத்த மசாலாவும் வெண்டைக்காயில் சேரும்வரை கலக்கவும்.
 8. மூடி 2.3 நிமிடங்கள் சிறு தீயில் வேகவைக்கவும். மூடியைத் திறந்து கலவை பாத்திரத்தில் அடியில் ஒட்டாமல் இருக்க நன்றாகக் கலக்கவும். மூடியிட்டு மூடி மீண்டும் 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 9. மூடியைத் திறக்கவும். இதற்குள், வெண்டைக்காய் நன்றாக வெந்திருக்கும், மீண்டும் 2-3 நிமிடங்கள் உயர் தீயில் வேகவைத்து எடுத்து வைக்கவும்.
 10. கரம் மசாலா சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுப்பிலிருந்து இறக்கவும்.
 11. இறுதியாக கொத்துமல்லி சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.
 12. கடலைமாவு வெண்டைக்காயை சப்பாத்தி, பரோட்டா அல்லது பூரியோடு பரிமாறவும்.

Reviews for Besan Bhindi Masala in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.