வாழைக்காய்ப் பொடி | Vazhakkai Podi | Raw Banana Powder in Tamil

எழுதியவர் Neeru Srikanth  |  4th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Vazhakkai Podi | Raw Banana Powder by Neeru Srikanth at BetterButter
வாழைக்காய்ப் பொடிNeeru Srikanth
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

13

0

வாழைக்காய்ப் பொடி

வாழைக்காய்ப் பொடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Vazhakkai Podi | Raw Banana Powder in Tamil )

 • வாழைக்காய் 1
 • துவரம் பருப்பு #x2013; ½ கப்
 • உளுந்து #x2013; ½ கப்
 • புளி #x2013; ½ எலுமிச்சை அளவு
 • பெருங்காயக் கட்டி #x2013; 2-3 சிறிய துண்டு
 • காய்ந்த மிளகாய் #x2013; 4
 • எண்ணெய் #x2013; 1 தேக்கரண்டி
 • உப்பு #x2013; சுவைக்கேற்ற அளவு

வாழைக்காய்ப் பொடி செய்வது எப்படி | How to make Vazhakkai Podi | Raw Banana Powder in Tamil

 1. வாழைக்காயைக் கழுவி கேஸ் மீது நேரடியாகக் காட்டி வறுத்துக்கொள்ளவும்.
 2. எல்லா பக்கமும் வெந்ததும், முழுமையாக ஆறவிடவும்.
 3. தோலை உரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
 4. ஒரு கடாயில் எண்ணெய், பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். எடுத்துவைத்து முழுமையாக ஆறவிடவும்.
 5. அதே கடாயில் துவரம் பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். முந்தைய பொருள்களை வறுத்தபின் உங்களிடம் கொஞ்சம் எண்ணெய் மீதம் இருக்கும்.
 6. துவரம் பருப்பின் மீது, உளுந்து, புளி சேர்த்து நல்ல நறுமணம் வரும்வரை வறுக்கவும். இந்தக் கலவை ஆறட்டும்.
 7. அனைத்துப் பொருள்களையும் உப்பு சேர்த்து வாழக்காயைத் தவிர, கரடுமுரடாக பருப்புப் பொடியை அடித்துக்கொள்ளவும். எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 8. நறுக்கிய வாழைக்காயைச் சேர்த்து ஒன்றல்லது இரண்டு முறை வாழைக்காய் நசுங்கும்வரை அரைத்துக்கொள்ளவும்.
 9. மீதமுள்ள பருப்பு பவுடரோடுக் கலந்து மிக்சியில் மேலும் ஒரு அடி அடித்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும், பரிமாறுவதற்கு.

எனது டிப்:

துவரம் பருப்புக்குப் பதிலாகக் கடலை பருப்பைக்கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

Reviews for Vazhakkai Podi | Raw Banana Powder in tamil (0)