வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் பொரிச்ச குழம்பு

Photo of Bottle gourd gravy by Sathya Kumar at BetterButter
371
2
0.0(0)
0

சுரைக்காய் பொரிச்ச குழம்பு

Oct-13-2018
Sathya Kumar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் பொரிச்ச குழம்பு செய்முறை பற்றி

சுரைக்காய் பொரிச்ச குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரைக்காய் 250கி
  2. பாசிப்பருப்பு 1 கப்
  3. துவரம் பருப்பு 1/4 கப்
  4. வெங்காயம் 2
  5. தக்காளி 1
  6. பச்சை மிளகாய் 4
  7. பூண்டு 6
  8. மஞ்சள் தூள்
  9. பெருங்காயத்தூள்
  10. வறுத்து அரைக்க:
  11. தேங்காய் துருவல் 1/4 கப்
  12. உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
  13. மிளகு சீரகம் 1 டீஸ்பூன்
  14. வரமிளகாய் 4
  15. தாளிக்க:
  16. சின்ன வெங்காயம் 10
  17. கருவேப்பிலை
  18. கடலைப்பருப்பு
  19. உளுத்தம்பருப்பு
  20. கடுகு
  21. எண்ணெய்
  22. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பு வறுத்து துவரம் பருப்புடன் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்
  2. சுரைக்காய் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
  3. வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை,மிளகு சீரகம் வரமிளகாய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும் பின் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்
  4. குக்கரில் ஊற வைத்த பருப்பு, சுரைக்காய், தக்காளி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 8 விசில் விட்டு இறக்கவும்
  5. வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்கி பின் வெந்த பருப்பு சேர்த்து கிளறவும்
  6. அரைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும் பின் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்