வீடு / சமையல் குறிப்பு / காய்கள் விருந்து(பூசணி,புடலங்காய், பாகற்காய், சுரைக்காய்)

Photo of Veggie combo festival by pavumidha arif at BetterButter
0
3
0(0)
0

காய்கள் விருந்து(பூசணி,புடலங்காய், பாகற்காய், சுரைக்காய்)

Oct-14-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காய்கள் விருந்து(பூசணி,புடலங்காய், பாகற்காய், சுரைக்காய்) செய்முறை பற்றி

இங்கு சுரைக்காய் கேரட் சாம்பார், பாகற்காய் வறுவல், புடலங்காய் பால் கூட்டு,பூசணி ஹல்வா, ஜவ்வரிசி பாயசம் உள்ளது.

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • కఠినము
 • పండుగలాగా
 • తమిళనాడు
 • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
 • వెయించడం/స్టిర్ ఫ్రై
 • ప్రెజర్ కుక్
 • మిళితం
 • ఆవిరికి
 • వేయించేవి
 • ప్రధాన వంటకం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. சாதம் செய்வதற்கு::
 2. அரிசி 2 கப்
 3. உப்பு தேவையான அளவு
 4. தண்ணீர் தேவையான அளவு
 5. சிவப்பு பூசணிக்காய் ஹல்வா செய்வதற்கு:::
 6. பூசணி 2 கப்
 7. வெல்லம் 1/2 கப்
 8. ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
 9. முந்திரி பருப்பு 5-6
 10. கிஸ்மிஸ் 4
 11. நெய் 10 டீஸ்பூன்
 12. பாகற்காய் வறுவல் செய்வதற்கு::
 13. பாகற்காய் 1 கப்
 14. மஞ்சள் தூள் 2 டீஸ்பூன்
 15. உப்பு தேவையான அளவு
 16. எண்ணெய் தேவையான அளவு
 17. அரிசி மாவு 1 டீஸ்பூன்
 18. கடலை மாவு 3 டீஸ்பூன்
 19. சிவப்பு மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
 20. கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
 21. பாயசம் செய்வதற்கு:::
 22. ஜவ்வரிசி 1/2 கப்
 23. பால் 2 கப்
 24. நெய் 4 டீஸ்பூன்
 25. முந்திரி பருப்பு 7
 26. கிஸ்மிஸ் 7
 27. சக்கரை தேவையான அளவு
 28. சுரைக்காய் சாம்பார் செய்வதற்கு:::
 29. சுரைக்காய் 1 கப்
 30. துவரம் பருப்பு 1/2 கப்
 31. புளி கரைசல் 1/4 கப்
 32. கேரட் 1 கப்
 33. சாம்பார் பொடி 1 டீஸ்பூன்
 34. மல்லி பொடி 2 டீஸ்பூன்
 35. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
 36. வெங்காயம் 1
 37. தக்காளி 1
 38. பூண்டு 5
 39. கருவேப்பிலை சிறிது
 40. பெருங்காயம் சிறிது
 41. எண்ணெய் தேவையான அளவு
 42. புடலங்காய் பால் கூட்டு::::
 43. புடலங்காய் 1 கப்
 44. கடலை பருப்பு 1/2 கப்
 45. கடுகு உளுந்துபருப்பு 1 டீஸ்பூன்
 46. மல்லி பொடி 2 டீஸ்பூன்
 47. சீரகம் 1 டீஸ்பூன்
 48. தேங்காய் துருவல் 6 ஸ்பூன்
 49. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
 50. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
 51. கரம் மசாலா சிறிது
 52. உப்பு தேவையான அளவு
 53. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

 1. சாதம் செய்வதற்கு;:: அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் அடுப்பில் தேவையான அளவு தண்ணீர் கொதிக்க விடவும்.
 2. பின்னர் அரிசி மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அரிசி நன்கு வெந்ததும் வடிகட்டி கொள்ளவும்.
 3. சுரைக்காய் கேரட் சாம்பார்:::
 4. குக்கரில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் பருப்பு, தக்காளி சேர்த்து வேக விடவும்.
 5. பருப்பு லேசாக வெந்ததும் அதில் வெங்காயம், பூண்டு, கேரட்,உப்பு,மல்லி தூள், மிளகாய் தூள், பெருங்காயம், சாம்பார் தூள்,சீரகம் சேர்த்து மூடி 1 விசில் விடவும்
 6. பின்னர் நறுக்கிய சுரைக்காய் சேர்த்து புளி கரைசல் ஊற்றி 1 விசில் விடவும்.
 7. பின்னர் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், கருவேப்பிலை, வெங்காயம்,மிளகாய் தூள் சேர்த்து லேசாக வறுக்கவும்
 8. வறுத்து பின்னர் இதனை சாம்பாரில் ஊற்றி அடுப்பை குறைந்த தீயில் 20 நிமிடம் நன்றாக சுரைக்காய் வேகும் வரை சமைக்கவும்.
 9. சுரைக்காய் கேரட் சாம்பார் தயார்.
 10. பூசணிக்காய் ஹல்வா:::
 11. பூசணிக்காயை தோல் நீக்கி அதனை துருவி கொள்ளவும். பின்னர் வாணலியில் சிறிது நெய் ஊற்றி முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்
 12. பின்னர் அதே வாணலியில் பூசணிக்காயை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
 13. சிறிது தண்ணீர் சேர்த்து பூசணியை நன்றாக வேக விடவும். தண்ணீர் வற்றிய பின்னர் ஏலக்காய் தூள் மற்றும் சக்கரை சேர்த்து கிளறவும்
 14. பின்னர் புட் கலர் தூள் மற்றும் நெய் சேர்த்து கொள்ளவும்.
 15. 10 நிமிடம் நன்றாக கிளறிய பின்னர் வறுத்து முந்திரி பருப்பு சேர்த்து கிளறவும்.
 16. பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் சிறிது நேரம் கிளறி இறக்கவும்.
 17. கலர்புல் பூசணிக்காய் ஹல்வா தயார்
 18. புடலங்காய் பால் கூட்டு:::::
 19. குக்கரில் ஊற வைத்த பருப்பு மற்றும் நறுக்கிய புடலங்காய் சேர்த்து 1-2 விசில் விடவும்.
 20. பின்னர் மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், மிளகாய் தூள், மல்லி தூள்,கரம் மசாலா, உப்பு மஞ்சள் தூள் சிறிது சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 21. குக்கரில் இந்த அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.5-10நிமிடம் குறைந்த தீயில் நன்றாக வற்ற விடவும்.
 22. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து பருப்பு ,கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி புடலங்காயில் கலவையில் சேர்த்து கிளறவும்
 23. 5-10நிமிடம் பின்னர் அடுப்பை அணைத்து விடவும். கெட்டி பதம் வேண்டும் என்றால் நன்றாக வற்றியதும் இறக்கவும்
 24. காரமான புடலங்காய் பால் கூட்டு தயார்
 25. ஜவ்வரிசி பாயசம்:::
 26. ஜவ்வரிசியை நன்றாக கழுவி 30நிமிடம் ஊற வைக்கவும்.பின் அதனை தண்ணீர் போட்டு கொதிக்க விடவும்.
 27. நன்றாக ஜவ்வரிசி வெந்ததும் பால் சேர்த்து10நிமிடம் கொதிக்க விடவும்
 28. சக்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். பிறகு நெய் வறத்த முந்திரி மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்
 29. சுவையான ஜவ்வரிசி பாயாசம் தயார்
 30. பாகற்காய் வறுவல்::::
 31. பாகற்காய் மெலிதாக வெட்டி கொள்ளவும். பின்னர் இதில் மஞ்சள் தூள் சேர்த்து 20நிமிடம் ஊற வைக்கவும்
 32. பின்னர் இதனை நன்றாக கழுவி பாகற்காயில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கடலை மாவு சிறிது அரிசி மாவு,கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறி 5நிமிடம் விடவும்
 33. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாகற்காயை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும்
 34. அருமையான பாகற்காய் வறுவல் தயார்
 35. சாதம்,சுரைக்காய் கேரட் சாம்பார், ஜவ்வரிசி பாயாசம், புடலங்காய் பால் கூட்டு,பாகற்காய் வறுவல்,பூசணிக்காய் ஹல்வா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்