வீடு / சமையல் குறிப்பு / ஓபிஓஸ் பீர்கங்காய் குருமா

Photo of OPOS Ridgegourd Kuruma by Sowmya Sundar at BetterButter
135
3
0.0(0)
0

ஓபிஓஸ் பீர்கங்காய் குருமா

Oct-14-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஓபிஓஸ் பீர்கங்காய் குருமா செய்முறை பற்றி

பதினைந்தே நிமிடத்தில் சுலபமாக செய்யலாம் இந்த வித்யாசமான, எண்ணெய் குறைவான பீர்கங்காய் குருமா .இட்லி ,தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்திற்கும் ஏற்ற சைட் டிஷ் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீர்க்கங்காய் ஒரு கப்
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. கடுகு சீரகம் தலா அரை டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  8. கொத்தமல்லி தழை சிறிது
  9. அரைக்க
  10. தேங்காய் துருவல் கால் கப்
  11. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  12. பூண்டு 3 பல்
  13. பச்சை மிளகாய் 2
  14. கசகசா 1 டீஸ்பூன்
  15. முந்திரி பருப்பு 4

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காயை லேசாக தோல் சீவி நறுக்கி கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் சிறிது வதங்கியதும் தக்காளி மற்றும் பீர்க்கங்காய் சேர்த்து லேசாக வதக்கவும்.மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொள்ளவும்.
  4. பின்னர் அதனுடன் சிறிது தண்ணீர் விட்டு குக்கரை மூடி ஒரு விசில் வரை வேக வைக்கவும்
  5. இதனிடையே அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  6. குக்கரை திறந்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்
  7. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்