வீடு / சமையல் குறிப்பு / தடியங்காய் தயிர் பச்சடி

Photo of White pumpkin curd pachadi by Fathima Beevi at BetterButter
1544
1
0.0(0)
0

தடியங்காய் தயிர் பச்சடி

Oct-14-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தடியங்காய் தயிர் பச்சடி செய்முறை பற்றி

தடியங்காய் தயிர் பச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தடியங்காய்-1 கப்- சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது
  2. தயிர்-1/4 கப்
  3. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  4. உப்பு-தேவையான அளவு
  5. தண்ணீர்- 1/4 கப்
  6. மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
  7. துருவிய தேங்காய்- 1/4 கப்
  8. சீரகம்- 1/4 டீ ஸ்பூன்
  9. பச்சை மிளகாய்-1
  10. தாளிக்க தேவையான பொருட்கள்:
  11. தேங்காய் எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  12. கடுகு -1/4 டீ ஸ்பூன்
  13. கருலேப்பில்லை -ஒரு கொத்து
  14. காய்ந்த மிளகாய் வற்றல்-2

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி தடியங்காய் துண்டுகள் சேர்த்து வேக விடவும்.
  2. மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
  3. தடியங்காய் சிறிது வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, பெருங் காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  4. தடியங்காய் நன்கு வெந்ததவுடன், தாளிக்க தேவையான பொருட்களை கொண்டு தாளித்து பச்சடியுடன் சேர்க்கவும்.
  5. பச்சடியை சிறிது குளிரவைத்து பின்பு தயிர் சேர்த்து நன்கு கிளறவும்.
  6. சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்