மோர்களி | Morkali in Tamil

எழுதியவர் Neeru Srikanth  |  5th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Morkali by Neeru Srikanth at BetterButter
மோர்களிNeeru Srikanth
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  25

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

13

0

Video for key ingredients

  மோர்களி recipe

  மோர்களி தேவையான பொருட்கள் ( Ingredients to make Morkali in Tamil )

  • கலப்பதற்கு & ஊறவைக்கவும்
  • பெருங்காயத் தூள் – 1/2 தேக்கரண்டி
  • அரிசி மாவு – 400 மிகி
  • தண்ணீர் – 3 கப்
  • மோர் – 1 கப்
  • எண்ணெயில் தாளிப்பதற்கு:
  • எண்ணெய் – 3 தேக்கரண்டி
  • பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
  • கடுகு – 1.5 தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு – 1.5 தேக்கரண்டி
  • கடலை பருப்பு – 1.5 தேக்கரண்டி
  • மோர் மிளகாய்/ வெயிலில் காயவைத்த மிளகாய் ' மோரில் -3
  • மற்றவை:
  • எண்ணெய் – 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – கொஞ்சம்
  • கொத்துல்லி - கொஞ்சம்

  மோர்களி செய்வது எப்படி | How to make Morkali in Tamil

  1. பெருங்காயம், அரிசி மாவு சேர்க்கவும். மோர் சேர்த்து & தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும், அப்போதுதான் கட்டிப்போகாது. தண்ணீராக இருக்கவேண்டும். தேவைப்பட்டால் அதிகத் தண்ணீர் சேர்க்கவும். 8 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
  2. 8 மணி நேரத்திற்குப் பிறகு நறுக்கிய கறிவேப்பிலை கொத்துமல்லியை ஊறவைத்தக் கலவையில் சேர்க்கவும்.
  3. ஒரு நான்-ஸ்டிக் கடாயில் வழங்கப்பட்டுள்ள வரிசைப்படி தாளிக்கவும் - எண்ணெய், பெருங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு, மோர் மிளகாய் ஆகியவற்றை நல்ல நறுமணம் வரும்வரை வறுத்துக்கொள்ளவும்.
  4. அதே கடாயில், ஊறவைத்த அரிசி மாவு & மோர் ஆகியவற்றை மேலுள்ள தாளிப்புப்பொருள்களோடு சேர்க்கவும். கட்டி சேராமல் கலந்துகொள்ளவும்.
  5. அடர்த்தியாகத் துவங்கியதும், முறையான இடைவெளியில் 1 தேக்கரண்டி எண்ணெயை 1 தேக்கரண்டி எண்ணெய் தீரும்வரை சேர்க்கவும்.
  6. மெதுவாக அல்வா பதத்திற்கு மாறும். தண்ணீரை எடுத்துவிட்டு உணவைத் தொட்டுபார்த்து உங்கள் கைகளில் ஒட்டக்கூடாது.
  7. ஒரு பாத்திரத்தினை எடுத்து எண்ணெய் தடவு துண்டுகளாக வெட்டி சில நிமிடங்கள் ஆறவிடவும்.
  8. உணவைச் சூடாக அல்லது அறையின் வெப்பத்தில் பரிமாறலாம். மோர்மிளகாய் உடன் சிறப்பாக இருக்கும். மிளகாய்ப்பொடியில் தோய்த்தால் சிறப்பாக இருக்கும் (இட்லி மிளகாய் தூள்).

  Reviews for Morkali in tamil (0)

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.