பால் திரட்டிப்பால் | Pal Therattipal in Tamil

எழுதியவர் Neeru Srikanth  |  5th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Pal Therattipal by Neeru Srikanth at BetterButter
பால் திரட்டிப்பால்Neeru Srikanth
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  2

  மணிநேரம்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

13

0

பால் திரட்டிப்பால் recipe

பால் திரட்டிப்பால் தேவையான பொருட்கள் ( Ingredients to make Pal Therattipal in Tamil )

 • ஏலக்காய்த் தூள் – 1/3 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
 • சர்க்கரை – 200மிலி
 • பால் - 2 லிட்டர்

பால் திரட்டிப்பால் செய்வது எப்படி | How to make Pal Therattipal in Tamil

 1. ஒரு கனமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும், ஒரு குக்கர் பாத்திரம் சிறந்தது தீயைக் குறைவாக வைத்து பாலைச் சேர்க்கவும். முதல் 1 மணி 15 நிமிடத்திற்கு ஒவ்வொரு 6-8 நிமிடங்களுக்கும் கலக்கவும். அதற்குப் பிறகு ஒவ்வொரு 3-4 நிமிடங்களுக்கும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.
 2. முறையான இடைவெளியில் பாத்திரத்தின் விளிம்புகளைச் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கவும். விளிம்புகளைச் சுத்தப்படுத்த கத்தி பயன்படுத்தலாம்.
 3. கிட்டத்தட்ட 1 மணி 30 நிமிடங்களில் அளவு 1/4 பங்காக வந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.
 4. சர்க்கரை சேர்த்ததும் தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவேண்டும். ஆரம்பத்தில் சர்க்கரையினால் பால் தண்ணீர் பதத்திற்கு மாறிவிடலாம், ஆனால் உடனே அடர்த்தியாகிவிடும்.
 5. திரட்டிப்பால் பதத்திற்கு அடர்த்தியானதும், ஏலக்காய்த் தூள் சேர்க்கவும், அடுப்பை நிறுத்துவதற்கு 5 நிமிடத்திற்கு முன் சேர்க்கவும்.
 6. அடுப்பை நிறுத்திவிட்டு திரட்டிப்பாலை பாத்திரத்திலேயே 5 நிமிடங்கள் விடவும்.

எனது டிப்:

பாத்திரம் கனமான அடிப்பாகம் உடையதாக இருக்கவேண்டும், அப்படி ஒன்று இல்லையென்றால் 30 நிமிட இடைவெளியில் 4 வெவ்வேறு பாத்திரத்திற்கு நீங்கள் மாற்ற வேண்டியிருக்கும். இல்லையேல் பால் தீய்ந்துபோய்விடும்.

Reviews for Pal Therattipal in tamil (0)