Photo of Bottle gourd Halwa by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
653
6
5.0(1)
0

Bottle gourd Halwa

Oct-14-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரைக்காய் -1 சிறியது (350 கிராம்)
  2. பால் -250 மில்லி
  3. சர்க்கரை - 150-200 கிராம்
  4. முந்திரி -6 பொடியாக நறுக்கியது
  5. பாதாம் -6 பொடியாக நறுக்கியது
  6. உலர்ந்த திராட்சை -10
  7. நெய் - 5-6 தேக்கரண்டி
  8. இனிப்பு இல்லாத கோவா - 3-4 தேக்கரண்டி
  9. கோவா செய்ய:
  10. பால் பவுடர் -1 கப்
  11. பால் -1 1/2 கப்
  12. நெய் -1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் :
  2. முதலில் இனிப்பு இல்லாத கோவா செய்ய ஒரு கடாயில் பால் பவுடர், பால், நெய் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கரைத்த கலவையை மிதமான தீயில் நன்கு 15 நிமிடங்கள் கிளற வேண்டும்.
  4. இப்பொழுது பால் நன்கு கெட்டியாகி கோவா பதத்துக்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.இப்பொழுது இனிப்பு இல்லாத கோவா தயார். இதை அல்வாவில் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்,
  5. சுரைக்காயை தோல் நீக்கி துருவி வைக்கவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  7. அதே நெய்யில் துருவி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து 5 -7 நிமிடம் நன்கு வதக்கவும்.
  8. பின்பு இதனுடன் 250 மில்லி பாலை சேர்த்து மிதமான தீயில் சுரைக்காயை வேகவிடவும்.
  9. பாலுடன் சுரைக்காய் நன்கு வெந்து பால் வற்றியவுடன் அதில் சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
  10. சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறியவுடன் அதில் 3-4 தேக்கரண்டி இனிப்பு இல்லாத கோவாவை சேர்த்து நன்கு கிளறவும்.
  11. இடையிடையே 2-3 முறை 1 தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி விடவும்.
  12. அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.
  13. இப்பொழுது சுவையான சுரைக்காய் அல்வா தயார்.
  14. சுரைக்காய் அல்வா

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Juvaireya R
Oct-16-2018
Juvaireya R   Oct-16-2018

Superb dear

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்