வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் பிரியாணி

Photo of Bottlegourd Biriyani by Sowmya Sundar at BetterButter
413
3
0.0(0)
0

சுரைக்காய் பிரியாணி

Oct-15-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் பிரியாணி செய்முறை பற்றி

துருவிய சுரைக்காய் சேர்த்து செய்யும் வித்யாசமான பிரியாணி.சுரைக்காய் சேர்த்திருப்பதே சுவையில் தெரியாததால் காய் சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் .இதை ஒன் பாட் மீலாக செய்துள்ளேன் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துருவிய சுரைக்காய் 2 கப்
  2. பிரியாணி அரிசி ஒரு கப்
  3. தண்ணீர் ஒன்றரை கப்
  4. பெரிய வெங்காயம் ஒன்று
  5. எண்ணெய் மூன்று டேபிள்ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. வறுத்த முந்திரி பருப்பு 6
  9. சீரகம் ஒரு டீஸ்பூன்
  10. அரைக்க:
  11. தக்காளி ஒன்று
  12. தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
  13. பச்சை மிளகாய் 2
  14. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  15. பூண்டு 3 பல்
  16. கசகசா 1/2 டீஸ்பூன்
  17. பட்டை கிராம்பு ஏலக்காய் தலா 2

வழிமுறைகள்

  1. சுரைக்காயை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும். அரிசியை களைந்து விட்டு பத்து நிமிடம் வரை ஊற வைத்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் மற்றும் துருவிய சுரைக்காய் சேர்த்து வதக்கவும்
  3. அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்
  4. வெங்காயம்,சுரைக்காய் வதங்கியதும் அரைத்த விழுது, மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து வதக்கவும்
  5. பின் களைந்து ஊற வைத்த பாஸ்மதி அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் இரண்டு விசில் வரை வேக வைத்து கொள்ளவும்.
  6. குக்கரை திறந்த பின் வறுத்த முந்திரிப்பருப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்