வீடு / சமையல் குறிப்பு / வெங்காய கொத்சு

Photo of Onion Gotsu by Lisha Aravind at BetterButter
1268
20
0.0(0)
0

வெங்காய கொத்சு

Aug-25-2015
Lisha Aravind
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசி பயிர் -1/4 கப்
  2. தக்காளி - 3 (நன்றாக நறுக்கப்பட்டது
  3. வெங்காயம் - 2 (நன்றாக நறுக்கப்பட்டது)
  4. பச்சை மிளகாய் - 3
  5. சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி
  6. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  7. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  8. கடுகு - 1/2 தேக்கரண்டி
  9. உளுந்து - 1/4 தேக்கரண்டி
  10. காய்ந்த சிவப்பு மிளகாய் - 1
  11. பெருங்காயத்தூள்/ஹிங் - ஒரு சிட்டிகை
  12. கரிவேப்பிலை - கொஞ்சம்
  13. உப்பு - சுவைக்கேற்றபடி

வழிமுறைகள்

  1. வெங்காயத் தோலை உரித்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை நன்றாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. பச்சை மிளகாயை நீளவாக்கி வெட்டிக்கொள்க.
  3. பாசிப்பயிரை (பச்சைப் பாசிப்பயிர்) மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  4. கடாயில் உள்ள எண்ணெயை சூடாக்கவும். கடுகு சேர்க்கவும், வெடிக்க ஆரம்பித்ததும், உளுந்து, கரிவேப்பிலை, காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். நன்றாக கலக்கி வறுக்கவும்.
  5. நறுக்கப்பட்ட வெங்காயத்தை சேர்த்து அது ஒளியூடுருவும் நிலைக்கு வரும்வரை நன்றாக வதக்கவும்.
  6. நன்றாக நறுக்கப்பட்ட தக்காளி, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து தளதளவென ஆகும்வரை வதக்கவும்.
  7. வேகவைத்த பாசிப்பயிர், தண்ணீர் மற்றும் உப்பை சேர்க்கவும். குறைவான தீயில் 10-15 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  8. இறுதியாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகளைச் சேர்க்கவும். வெங்காய கொஸ்தை சூடாக இட்லி, தோசை அல்லது பொங்கலோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்