வீடு / சமையல் குறிப்பு / கீரை பிரெட் உப்மா

Photo of Green bread Upma by Divya  at BetterButter
1255
15
4.5(0)
0

கீரை பிரெட் உப்மா

Jul-05-2016
Divya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாண்ட்விச் பிரெட் - 1 சிறிய பேக்
  2. வெங்காயம் - 2 நறுக்கப்பட்டது
  3. சுவைக்கு உப்பு
  4. எண்ணெய் 1 தேக்கரண்டி
  5. ஒன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  6. கொத்துமல்லி - 1 சிறிய கொத்து
  7. தேங்காய் துருவல் - 1/2 கப்
  8. வெங்காயம் - 1 நறுக்கப்பட்டது
  9. இஞ்சி - 1 இன்ச் துண்டு
  10. பச்சை மிளகாய் - 4 எண்ணிக்கை
  11. இலவங்கப்பட்டை - 1 துண்டு
  12. கிராம்பு - 2 துண்டுகள்
  13. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் பிரெட்டை சிறுசிறு துண்டுகளாக விளிம்புகளைச் சுற்றி வெட்டிக்கொள்ளவும்.
  2. எதுவும் சேர்க்காமல் பிரெட் துண்டுகளை 2 நிமிடங்கள் ஒரு கடாயில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அரைப்பதற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் சாந்தாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி வெங்காயம் சேர்த்து சில நிமிடங்கள் அது வேகும்வரை வதக்கவும்.
  5. அரைத்த மசாலா சாந்தைச் சேர்த்து சில நிமிடங்கள் பச்சை வாடை போகும்வரை சமைக்கவும்.
  6. தேவையான அளவு உப்பை, கலவையில் சேர்த்துக்கொள்ளவும். (பிரெட்டிலும் உப்பு இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்)
  7. இறுதியாக பிரெட் துண்டுகளைச் சேர்த்து எல்லாவற்றையும் 2 நிமிடங்களுக்கு ஒன்றாகக் கலந்துகொள்ளவும், அப்போதுதான் மசாலா அனைத்து பிரெட் துண்டுகளிலும் முறையாகப் பூசிக்கொள்ளும்.
  8. உப்பு சரிபார்க்கவும்.
  9. சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்