வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் பச்சடி

Photo of Bitter Gourd Pachadi by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
446
2
0.0(0)
0

பாகற்காய் பச்சடி

Oct-15-2018
Muthulakshmi Madhavakrishnan
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் பச்சடி செய்முறை பற்றி

பாகற்காய் பச்சடி வெங்காயம், தக்காளி, புளி வைத்து செய்யும் இந்த பச்சடி சாம்பார், ரசம் போன்ற குழம்பு வகைகளுக்கு ருசியான சைட் டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 பாகற்காய்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1 டேபிள் ஸ்பூன் புளி
  5. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  7. 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  8. 2 டேபிள் ஸ்பூன் வெல்லம்
  9. 1/4 கப் தேங்காய் துருவல்
  10. 2 சின்ன வெங்காயம்
  11. 1/4 டீஸ்பூன் சீரகம்
  12. 1/2 டீஸ்பூன் கடுகு
  13. 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  14. கறிவேப்பிலை
  15. 2 டேபிள் எண்ணெய்
  16. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாகற்காயை நன்றாக கழுவி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை ‌நறுக்கிக் கொள்ளவும்.
  2. புளியை இளம் சூடான நீரில் போட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். பின் 1 கப் தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
  3. தேங்காய் துருவல், சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  4. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்க்கவும். பின் வெங்காயம் மற்றும் நறுக்கிய பாகற்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. அவை நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து வேக வைக்கவும்.
  7. பாகற்காய் நன்கு வெந்ததும் புளிக்கரைசலை மெதுவாக சேர்த்து நன்கு கலந்து விடவும். சிறிது நேரம் கொதித்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  8. பின் சிறிய துண்டு வெல்லம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும். பச்சடி நன்கு கொதித்ததும் சிறிதளவு கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்