வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பாசிபருப்பு கூட்டு

Photo of Snake gourd moong dal kootu by Fathima Beevi at BetterButter
531
3
5.0(0)
0

புடலங்காய் பாசிபருப்பு கூட்டு

Oct-15-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பாசிபருப்பு கூட்டு செய்முறை பற்றி

புடலங்காய் பாசிபருப்பு கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய்- 1/2
  2. பாசிபருப்பு-50 கிராம்
  3. பெரிய வெங்காயம்-1/2
  4. பெரிய பச்சை மிளகாய்-1
  5. மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  6. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  7. உப்பு- தேவையான அளவு
  8. கொத்தமல்லி இலை- தேவைப்பட்டால்
  9. மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
  10. துருவிய தேங்காய்- 1/4 கப்
  11. சீரகம்- 1/4 டீ ஸ்பூன்
  12. பச்சை மிளகாய்-1
  13. தாளிக்க தேவையான பொருட்கள்:
  14. தேங்காய் எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  15. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  16. சீரகம் -1/4 டீ ஸ்பூன்
  17. கருலேப்பில்லை -ஒரு கொத்து
  18. நறுக்கிய வெங்காயம்- 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
  2. புடலங்காயை தோல் சீவி, விதைகளை அகற்றி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. பெரிய வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்
  4. பாசி பருப்பை சுத்தம் செய்து கொள்ளவும்
  5. ஒரு குக்கரில் பாசி பருப்பு,  பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள்,  சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம்  பொடித்து கருலேப்பில்லை, வெங்காயம் சேர்த்து வதக்கி நறுக்கிய புடலங்காய், உப்பு சேர்த்து வதக்கவும்.
  7. புடலங்காய் சிறிது வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வேக விடவும்.
  8. புடலங்காய் நன்கு வெந்ததவுடன், வேக வைத்த பாசி பருப்பு மற்றும் பாசிப்பருப்பு வேக வைத்த தண்ணீரை சேர்த்து நன்கு கிளறி மிதமான சூட்டில் ஒரு 5 நிமிடங்கள் வேக விடவும்.
  9. தேவைப்பட்டால் கொத்தமல்லி இலை களை தூவி கிளறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்