வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் பாசிப்பருப்பு தோசை

Photo of Ridgegourd Moongdal Dosa by Sowmya Sundar at BetterButter
361
3
0.0(0)
0

பீர்க்கங்காய் பாசிப்பருப்பு தோசை

Oct-16-2018
Sowmya Sundar
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் பாசிப்பருப்பு தோசை செய்முறை பற்றி

பீர்க்கங்காய் மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து செய்யலாம் ஆரோக்கியமான தோசை. பீர்க்கங்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.அதனுடன் பாசிப்பருப்பும் சேரும் போது கூடுதல் நன்மை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய் துண்டுகள் 1 கப்
  2. இட்லி அரிசி ஒரு கப்
  3. பாசிப்பருப்பு அரை கப்
  4. உளுத்தம்பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 3
  6. சீரகம் ஒரு டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. நல்லெண்ணெய் தோசை வார்க்க
  9. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காயை மிக லேசாக தோல் சீவி மீதி தோலுடனே நறுக்கிக் கொள்ளவும்
  2. அரிசி மற்றும் பருப்பு வகைகளை களைந்து தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
  3. பின் தண்ணீர் வடித்து தனியாக வைத்து கொள்ளவும்.மிக்ஸியில் ஊறிய அரிசி மற்றும் பருப்பு வகைகள் ,உப்பு, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து சிறிது ஊறிய தண்ணீர் விட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
  4. பின் பீர்கங்காய் துண்டுகள் சேர்த்து நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும்.
  5. மாவில் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த மாவை புளிக்க வைக்க தேவையில்லை.உடனடியாக வார்க்கலாம்.
  6. தோசை கல் காய்ந்ததும் மாவை விட்டு லேசான தோசையாக தேய்த்து எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  7. உடனடியாக செய்யகூடிய பீர்க்கங்காய் தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்