வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பொடிமாஸ்

Photo of Vazhakkai Podimas | Plantain Curry by Neeru Srikanth at BetterButter
2787
106
4.7(0)
0

வாழைக்காய் பொடிமாஸ்

Jul-06-2016
Neeru Srikanth
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் - 2
  2. மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
  3. பெருங்காயம் – தாராளமான சிட்டிகை
  4. எலுமிச்சை – 1/2
  5. சுவைக்கு உப்பு
  6. தேங்காய் – 75 மிகி
  7. எண்ணெய் – 1 தேக்கரண்டி
  8. கடுகு – 1.5 தேக்கரண்டி
  9. உளுத்தம்பருப்பு – 1.5 தேக்கரண்டி
  10. கடலை பருப்பு – 1.5 தேக்கரண்டி
  11. பச்சை மிளகாய் – 1
  12. இஞ்சி – 1 இன்ச்
  13. கறிவேப்பிலை –கொஞ்சம்
  14. கொத்துமல்லி - கொஞ்சம்

வழிமுறைகள்

  1. வாழைக்காய் நுனியை நறுக்கிவிடவும். வாழைக்காயை தண்ணீரில் 10 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும். சற்றே வெடிக்கும் சப்தம் கேட்கும், வெந்துவிட்டது என்று பொருள்.
  2. வெளியில் எடுத்து ஆறவிடவும். தோலை உரித்து துருவிக்கொள்ளவும்.
  3. மஞ்சள், பெருங்காயம்த் தூள், உப்பு சேர்த்துக் கலக்கிக்கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் தாளிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அட்டவணையின் வரிசையில் சேர்க்கவும்.
  5. வெந்ததும், வாழைக்காய்த் துருவலைச் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.
  6. அடுப்பை நிறுத்திவிட்டு தேங்காய் சேர்த்து எலுமிச்சையைப் பிழிந்துவிடவும்.
  7. கடைசியால் நீங்கள் கொத்துமல்லியால் அலங்கரித்துக்கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்